. தமிழ்நாட்டினுடைய சமூக மாற்றங்களுக்கு ஈ.வெ.ரா. பெரியாரின் தீர்மானகரமான பங்களிப்பை மதிப்பீடு செய்யவும்.
Answers
Answered by
1
தமிழ் நாட்டினுடைய சமூக மாற்றங்களுக்கு ஈ.வெ.ரா. பெரியாரின் தீர்மானகரமான பங்களிப்பு
- ஈரோடு மாவட்டத்தினை சார்ந்த பகுத்தறிவுவாதியான பெரியார் 1925 ஆம் ஆண்டு சுயமரியாதை இயக்கத்தினை தொடங்கினார்.
- சமயம் அகற்றப்பட்டு அவ்விடத்தில் பகுத்தறிவு வைக்கப்பட வேண்டுமென பெரியார் விரும்பினார்.
- சடங்குகளற்ற சாதி மறுப்பு, சுயமரியாதை திருமணங்களை பெரியார் கொண்டு வந்தார்.
- பெரியார் கேரள மாநிலத்தில் உள்ள வைக்கம் என்ற இடத்தில் ஒடுக்கப்பட்ட மக்கள் கோயிலுக்கு செல்ல அனுமதிக்குமாறு போராட்டம் செய்து வெற்றி பெற்றார்.
- இதன் காரணமாக வைக்கம் வீரர் என அழைக்கப்பட்டார்.
- சேரன் மாதேவி குருகுலப் பள்ளியில் நடந்த சாதி பாகுபாட்டினை பெரியார் கண்டித்து எதிர்த்தார்.
- பெரியாரின் மிக முக்கியப் பணியாக கருதப்படுவது ஒடுக்கப்பட்ட மக்களுக்காக போராடியது, பகுத்தறிவு கொள்கைகளை பரப்பியது, மதுவிற்கு எதிராக போராடியது மற்றும் பெண் விடுதலைக்காக போராடியது முதலியன ஆகும்.
Similar questions