காவிரி ஆறு குறித்து தொகுத்து எழுதுக
Answers
Answered by
4
காவிரி ஆறு
- கர்நாடக மாநிலம், கூர்க் மாவட்டத்தில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள பிரம்மகிரி குன்றில் உள்ள தலைக்காவிரி என்ற இடத்தில் காவிரி ஆறு உற்பத்தியாகிறது.
- தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல் என்ற இடத்தில் நீர் வீழ்ச்சியினை உண்டாக்குகிறது.
- சேலம் மாவட்டத்தில் காவிரி ஆற்றின் குறுக்கே மேட்டூர் அணை கட்டப்பட்டு உள்ளது.
- மேட்டூர் நீர் தேக்கத்திலிருந்து சுமார் 45 கிலோ மீட்டர் தொலைவில் காவிரியின் துணை ஆறாக பவானி ஆறு கலக்கிறது.
- காவிரி திருச்சிராப்பள்ளிக்கு பிறகு கொள்ளிடம் மற்றும் காவிரி என இரு கிளைகளாக பிரிந்து, 16 கிலோ மீட்டர் பயணித்த பின், இரு கிளைகளும் ஒன்று சேர்ந்து ஆற்றுத் தீவாக ஸ்ரீரங்கத் தீவினை உருவாக்குகின்றன.
- தமிழ் நாட்டில் சுமார் 416 கிலோ மீட்டர் நீளத்திற்கு பாய்கிறது.
- காவிரி நதி ஆனது கடலூர் மாவட்டத்திற்கு தெற்கே வங்கக் கடலில் கலக்கிறது.
Similar questions
Math,
4 months ago
Hindi,
4 months ago
World Languages,
4 months ago
Science,
1 year ago
Math,
1 year ago