தமிழ்நாட்டில் உள்ள மண் வகைகளின், பரவல் மற்றும் அவற்றின் பண்புகளை விளக்குக.
Answers
Answered by
0
please mark brainliest
please write in English or Hindi
Answered by
0
தமிழ் நாட்டில் உள்ள மண் வகைகள்
வண்டல் மண்
- வண்டல் மண் ஆனது சுண்ணாம்புச் சத்து, பொட்டாசியம், மெக்னீசியம், நைட்ரஜன் மற்றும் பாஸ்பாரிக் அமிலம் ஆகிய தாதுக்களை பெற்று உள்ளது.
- வண்டல் மண் உள்ள இடங்கள் தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம், விழுப்புரம், கடலூர், திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி ஆகும்.
கரிசல் மண்
- கரிசல் மண்ணில் கால்சியம், மாக்னீசியம், கார்பனேட், பொட்டாஷ் மற்றும் சுண்ணாம்பு சத்துக்கள் உள்ளன.
- கரிசல் மண் உள்ள இடங்கள் மதுரை, விருதுநகர், திருநெல்வேலி முதலியன ஆகும்.
செம்மண்
- தமிழ் நாட்டின் மத்திய மாவட்டங்களில் செம்மண் பரவி காணப்படுகிறது.
- செம்மண் ஆனது நுண் துகள்களை உடையதால் ஈரப்பத்தினை தக்க வைத்துக் கொள்ளும் தன்மை இல்லாமல் உள்ளது.
சரளை மண்
- மண்ணில் கரைந்து உள்ள சத்துக்கள் மழை நீரினால் அடித்து செல்லப்படுவதால் உருவாகும் மண்ணே சரளை மண் ஆகும்.
- சரளை மண் ஆனது காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களின் சில பகுதிகள் மற்றும் நீலகிரி மலையின் சில பகுதிகள் ஆகிய இடங்களில் காணப்படுகிறது.
உவர் மண்
- கடல் அலைகளால் உப்புகள் படிய வைக்கப்பட்டு உவர் மண் உருவாகிறது.
- வேதராண்யம், நாகப்பட்டினம் கடற்கரை பகுதிகளில் உவர்மண் உள்ளது.
Similar questions