தமிழ்நாட்டின் பல்வேறு போக்குவரத்து முறைகளை விவரி.
Answers
Answered by
1
தமிழ் நாட்டின் போக்குவரத்து முறைகள்
சாலை வழி போக்குவரத்து
- தமிழ் நாட்டில் உள்ள மொத்த சாலைகளின் நீளம் 1,67,000 கிலோ மீட்டர் ஆகும்.
- தமிழ் நாட்டில் உள்ள சாலைகள் தேசிய நெடுஞ்சாலைகள், மாநில நெடுஞ்சாலைகள், மாநகராட்சி மற்றும் நகராட்சி சாலைகள், ஊராட்சி ஒன்றிய சாலைகள், கிராம பஞ்சாயத்து சாலைகள், வனச் சாலைகள், வணிக ரீதியிலான சாலைகள், வணிக ரீதியற்ற சாலைகள் என பலவகையாக பிரிக்கப்பட்டு உள்ளன.
தமிழ் நாட்டில் இரயில்வே போக்குவரத்து
- தமிழ் நாட்டின் மொத்த இருப்புப் பாதையின் நீளம் 6,693 கிலோ மீட்டர் ஆகும்.
- தமிழ் நாட்டில் 690 இரயில் நிலையங்கள் உள்ளன.
- தமிழகத்தில் உள்ள முக்கிய இரயில் சந்திப்புகள் சென்னை, கோயம்புத்தூர், ஈரோடு, மதுரை, சேலம், திருச்சி மற்றும் திருநெல்வேலி முதலியன ஆகும்.
நீர் வழிப் போக்குவரத்து
- தமிழ் நாட்டில் உள்ள பெரிய முக்கியமான துறைமுகங்கள் சென்னை, எண்ணூர் மற்றும் தூத்துக்குடி ஆகும்.
- தமிழ் நாட்டில் இந்த மூன்று துறைமுகங்கள் இல்லாமல் நாகப்பட்டினத்தில் இடைநிலை துறைமுகமும், பிற பகுதிகளில் 15 சிறிய துறைமுகங்களும் காணப்படுகின்றன.
வான் வழி போக்குவரத்து
- சென்னை, கோயம்புத்தூர், மதுரை மற்றும் திருச்சிராப்பள்ளி ஆகிய இடங்களில் சர்வதேச விமான நிலையங்கள் காணப்படுகின்றன.
- உள் நாட்டு விமான நிலையங்கள் தூத்துக்குடி மற்றும் சேலம் ஆகிய இடங்களில் காணப்படுகின்றன.
Similar questions
Chemistry,
5 months ago
Chemistry,
5 months ago
Science,
5 months ago
India Languages,
10 months ago
Biology,
1 year ago