தமிழ்நாட்டின் தோட்ட வேளாண்மை பற்றி விளக்குக
Answers
Answered by
3
தமிழ் நாட்டில் தோட்ட வேளாண்மை
- தமிழ் நாட்டில் தோட்ட வேளாண்மை ஆனது மேற்கு மற்றும் கிழக்கு தொடர்ச்சி மலைகளின் சரிவுகளில் பயிரிடப்படுகின்றன.
- தோட்ட வேளாண்மையில் பயிரிடப்படும் முக்கிய தோட்டப் பயிர்கள் தேயிலை, காப்பி, இரப்பர், முந்திரி, பாக்கு மற்றும் சின்கோனா முதலியன ஆகும்.
- தேயிலை உற்பத்தியில் அசாம் மாநிலத்திற்கு அடுத்த இடத்திலும், காபி உற்பத்தியில் கர்நாடகா மாநிலத்திற்கு அடுத்த இடத்திலும் தமிழ் நாடு உள்ளது.
- தேயிலை ஆனது நீலகிரி மலை மற்றும் கோயம்புத்தூரில் உள்ள மலைகளிலும், காபி ஆனது மேற்கு மற்றும் கிழக்கு தொடர்ச்சி மலைகளின் சரிவுகளிலும் பயிரிடப்படுகிறது.
- கன்னியாக்குமரி மாவட்டத்தில் உள்ள மலைப் பகுதிகளில் இரப்பர் அதிகமாக பயிரிடப்படுகிறது.
Similar questions