அணிசேரா இயக்கம் பற்றி விரிவான குறிப்பு எழுதுக.
Answers
Explanation:
sariyaana vedai tamila
அணிசாரா இயக்கத்தின் 15வது உச்சி மாநாடு, ஜூலை 16ம் நாள், எகிப்தின் ஷார்ம் ஏல் ஷெய்க் நகரில் நிறைவடைந்தது. புதிய நிலைமையில் இந்த இயக்கம் பல்வேறு வளரும் நாடுகளின் நலன்களைத் தொடர்ந்து பிரதிநிதித்துவப்படுத்தி, பன்னாட்டு சமூகத்தில் தனிச்சிறந்த பங்காற்ற வேண்டும் என்று வளரும் நாடுகள் விரும்புவதை இம்மாநாட்டில் விவாதிக்கப்பட்ட பல்வேறு பிரச்சினைகள், கடைசியில் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஆவணங்கள் ஆகியவை காட்டுகின்றன.
2 நாட்கள் நீடித்த இம்மாநாட்டில் கலந்து கொண்ட 100க்கு மேலான நாடுகளின் தலைவர்கள் அல்லது பிரதிநிதிகள், உலக ஒற்றுமை, அமைதியான வளர்ச்சி என்ற தலைப்பில், கருத்துக்களை முழுமையாகப் பரிமாறிக் கொண்டனர். அணிசாரா இயக்கத்தின் வளர்ச்சித் திசை, எதிர்கால வாய்ப்பு ஆகியவை பற்றியும், மத்திய கிழக்கு, சர்வதேச நிதி நெருக்கடி உள்ளிட்ட சர்வதேச மற்றும் பிரதேச புதிய சிக்கலான பிரச்சினைகள் பற்றியும், அவர்கள் முக்கியமாக விவாதித்தனர். கடைசியில் பொது கருத்தை எட்டி, பல ஆக்கப்பூர்வ சாதனைகளைப் பெற்றனர்.
அணிசேரா இயக்கம்
- 1953 ஆம் ஆண்டு ஐ.நா. சபையில் உரையாற்றிய வி.கிருஷ்ண மேனன் என்பவரால் அணிசேரா இயக்கம் என்ற சொல் உருவாக்கப்பட்டது.
- இந்திய வெளியுறவுக் கொள்கையின் முக்கிய அம்சமாக அணி சேராமை விளங்குகிறது.
- ராணுவக் கூட்டணியில் சேராமல் வெளி நாட்டு விவகாரங்களில் தேசிய சுதந்திரத்தினைப் பராமரித்தலே அணி சேரா இயக்கத்தின் நோக்கம் ஆகும்.
- அணி சேரா இயக்கம் ஆனது 120 உறுப்பு நாடுகள், 17 பார்வையாளர் நாடுகள், 10 சர்வதேச நிறுவனங்கள் முதலியனவற்றினை கொண்டு உள்ளது.
- அணி சேரா இயக்கம் ஆனது அரசியல் இயக்கத்திலிருந்து பொருளாதார இயக்கமாக மாறியுள்ளது.
- ஜவஹர்லால் நேரு (இந்தியா), டிட்டோ (யுகோஸ்லாவியா), நாசர் (எகிப்து), சுகர்னோ (இந்தோனேசியா) மற்றும் குவாமே நிக்ரூமா (கானா) ஆகியோர் அணிசேரா இயக்கத்தின் நிறுவனத் தலைவர்கள் ஆவர்.