பண்டங்கள் மற்றும் பணிகள் வரி __________ ஆண்டு முதல் நடைமுறைக்கு வந்தது.
Answers
Answer:
சரக்கு மற்றும் சேவை வரி (Goods and Services Tax; GST) ஒரு மறைமுக வரி, இது இந்தியா முழுவதும் மத்திய மற்றும் மாநில அரசாங்கங்களால் விதிக்கப்படும் பல்வேறு வரிகளுக்கு பதிலாக ஒற்றை வரியாக அறிமுகப்படுத்தப்படுகிறது. இது அரசியலமைப்பு சட்டம் 2017 (நூற்று இருபத்து இரண்டாம் திருத்தச் சட்டம்)-ஆக அறிமுகமாகிறது. இந்த ச.சே.வரியானது ஜிஎஸ்டி சபை மற்றும் அதன் தலைவர் மத்திய நிதி அமைச்சர் இந்தியா – அருண் ஜெட்லியினால் நிர்வகிக்கப்படுகிறது. இந்த ச.சே.வரி-யின் கீழ், சரக்கு மற்றும் சேவைகளானது பின்வரும் விகிதங்களில் வரி விதிக்கப்படுகிறது அவை: 0%, 5%, 12%, 18%, 28% ஆகும். கடினமான விலைமதிப்பற்ற கற்கள் மீது 0.25% சிறப்பு விகிதமும் வடிவமற்ற அரைகுறைவான கற்கள் மற்றும் தங்கம் மீதும் 3% வரி விதிக்கப்பட்டுள்ளது.
ச.சே. வரியானது 1 ஜூலை 2017 நள்ளிரவு முதல் துவக்கப்படுகிறது. இதனை பிரதமர் மோடி மற்றும் எதிர்க் கட்சிகள் முன்னிலையில் நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது.
ஜூலை 1, 2017
பண்டங்கள் மற்றும் பணிகள் வரி (GST)
- பண்டங்கள் மற்றும் பணிகள் வரி ஆனது ஜூலை 1, 2017 அன்று நடைமுறைக்கு வந்தது.
- இது ஒரு வகை மறைமுக வரி ஆகும்.
- பண்டங்கள் அல்லது பணிகளை நுகர்வோர் வாங்கும் போது விதிக்கப்படும் வரியே பண்டங்கள் மற்றும் பணிகள் வரி (GST) ஆகும்.
- இதன் நோக்கம் மத்திய மற்றும் மாநில அரசினால் பண்டங்கள் மற்றும் பணிகளுக்கு விதிக்கப்படும் அனைத்து மறைமுக வரிகளையும் மாற்றுவது ஆகும்.
- GST வரி ஆனது பண்டங்கள் மற்றும் பணிகளின் உற்பத்தி மற்றும் வழங்குதல் மீதான வரிகளின் அடுக்கு விளைவுகளை நீக்க உதவுகிறது.
- GST வரி ஆனது ஒரு முனை வரி ஆகும்.