__________ வரியில் வரியின் சுமையை மற்றவர்களுக்கு மாற்ற முடியாது.
Answers
நேர்முக வரி
வரி
- எந்த ஒரு குறிப்பிட்ட நன்மையினையும் எதிர்பாராமல் கட்டாயமாக அரசுக்கு செலுத்தப்படக்கூடிய பணமே வரி என்று அழைக்கப்படுகிறது.
நேர்முக வரி
- அரசிற்கு நேரடியாக செலுத்தக் கூடிய தனி நபரின் வருமானம் மற்றும் செல்வம் மீது விதிக்கப்படும் வரிக்கு நேர்முக வரி என்று பெயர்.
- நேர்முக வரி என்பது யார் மீது வரி விதிக்கப்பட்டதோ அவரே அந்த செலுத்தும் வரி ஆகும்.
- வரியின் சுமையினை வரி செலுத்துபவரே ஏற்க வேண்டும் என்பது பேராசிரியர் ஜே.எஸ். மில்லின் வரையறை ஆகும்.
- நேர்முக வரியின் சுமையினை மற்றவருக்கு மாற்ற முடியாது.
- மேலும் நேர்முக வரி ஆனது வளர்வீத தன்மையினை உடையது ஆகும்.
- (எ.கா) வருமான வரி, நிறுவன வரி மற்றும் சொத்து வரி அல்லது செல்வ வரி முதலியன ஆகும்.
Explanation:
வரி (tax) என்பது, அரசோ அதுபோன்ற அமைப்புக்களோ, தனி நபர் அல்லது நிறுவணங்களிடமிருந்து பெறும் நிதி அறவீடு ஆகும். வரி அறவிடும் வேறு அமைப்புக்களாகப் பழங்குடி இனக்குழுக்கள், விடுதலைப் போராட்டக் குழுக்கள், புரட்சிக் குழுக்கள் என்பவற்றைக் குறிப்பிடலாம். இத்தகைய அமைப்புக்கள் அறவிடும் வரிகள் பெரும்பாலும் சட்டபூர்வமானவையாகக் கருதப்படுவதில்லை. இதனால் அரசாங்கங்கள் இவ்வாறு அறவிடப்படும் வரியைக் கப்பம் எனக் குறிப்பிடுவது உண்டு. ஒன்றிய அரசு தவிர, உள்ளூராட்சி அமைப்புக்கள், மாநில அரசுகள் போன்ற பல துணை அரச அமைப்புக்களும் வரி அறவிடுவதுண்டு.
வரிகள் நேரடி வரி, அல்லது மறைமுக வரியாக இருக்கலாம். வரியைப் பணமாகவோ, பொருளாகவோ, அல்லது உழைப்பாகவோ செலுத்தும் வழக்கம் இருந்து வந்தது. மரபுவழி மற்றும் முதலாளித்துவத்திற்கு முற்பட்ட முறைமைகளின் கீழேயே வரிகள் பொருட்களாகவும், ஊழியம் போன்ற உடல் உழைப்பாகவும் அறவிடப்பட்டு வந்தது. தற்காலத்தில் வரிகள் பொதுவாகப் பணமாகவே அறவிடப்படுகின்றன.
பொதுவாக நாடுகளின் அரசுகள், அவற்றின் நிதி அமைச்சகங்களின் கீழ் அமையும் அமைப்புக்கள் மூலமாக வரிகளை அறவிடுகின்றன. வரிகள் செலுத்தப்படாவிட்டால் அபராதம், சிறை போன்ற தண்டனைகளும் வழங்கப்பட விதி முறைகள் உள்ளன. சுங்கவரி, காணிக்கை, குத்தகைக்காரர் நிலக்கிழாருக்கு செலுத்தும் வரி, கடமை வரி, விருப்ப வரி, கலால், மானியம், அரசு உதவி வரி, மதிப்புக் கூட்டு வரி என்னும் பல்வேறு பெயர்களால் வரி வசூலிக்கப்படுகின்றது.