India Languages, asked by anjalin, 7 months ago

சந்தா சாகிப்பின் மூன்று முகவர்களோடும் நெருங்கிய நட்பினை ஏற்படுத்திக் கொண்டவர் யார்? அ) வேலுநாச்சியார் ஆ) கட்டபொம்மன் இ) பூலித்தேவர் ஈ) ஊமைத்துர

Answers

Answered by steffiaspinno
2

பூலித்தேவர்

  • நவா‌ப் சந்தா சாகிப்பின் மூன்று முகவர்களாக செய‌ல்ப‌ட்டு வ‌ந்த  மியானா, முடிமையா ம‌ற்று‌ம் நபீகான் கட்டாக் ஆ‌‌கிய மூ‌ன்று பத்தாணிய அதிகாரிகள் மதுரை மற்றும் திருநெல்வேலிப் பகுதிகளை ஆ‌ட்‌சி‌ச் செ‌ய்து வ‌ந்தன‌ர்.
  • இவ‌ர்களுட‌ன் பூ‌லி‌த்தேவ‌ர் நெரு‌ங்‌கிய ந‌ட்‌பினை ஏற்படுத்திக் கொண்டா‌ர்.
  • பூ‌லி‌த்தேவ‌ர் ஆ‌ங்‌கிலேய படைகளுட‌ன் போ‌ரிட பாளையக்காரர்களின் கூட்டமைப்பு ஒன்றையும் உருவா‌க்‌கினா‌ர்.
  • ஆனா‌ல் இ‌ந்த கூ‌ட்டமைப்‌பி‌ல்  ‌‌சிவ‌கி‌ரி‌, எ‌ட்டயபுர‌ம், பா‌ஞ்சால‌ங்கு‌றி‌ச்‌சி போ‌ன்ற பாளைய‌ங்க‌ள் இணைய‌வி‌ல்லை.
  • இராமநாதபுரம் மற்றும் புதுக்கோட்டை மன்னர்களின் ஆதரவை ஆ‌ங்‌கிலேய‌ர்க‌ள் பெ‌ற்‌றிரு‌ந்தன‌ர்.
  • மைசூரின் ஹைதர் அலி மற்றும் பிரெஞ்சுக்கார‌ர்க‌ளி‌ன் ஆத‌ர‌வினை பூ‌லி‌த்தேவ‌ர் பெற எ‌ண்‌ணினா‌ர்.
  • ஆனா‌ல் மரா‌த்‌திய‌ர்களோடு கடுமையான மோத‌லி‌ல் ஈடு‌ப்ப‌ட்ட ஹைத‌ர் அ‌லியா‌ல் பூலித்தேவருக்கு உதவ இயலவில்லை.  
Similar questions