காந்தி மற்றும் மக்கள் தேசியம் அ) காந்தியடிகளின் வாழ்க்கையில் திருப்புமுனையை ஏற்படுத்திய சம்பவம் எது? ஆ) காந்தியடிகளின் வாழ்க்கையில் மாற்றத்தை உருவாக்கிய படைப்புகள் யாவை? இ) தென்னாப்பிரிக்காவில் சத்தியாகிரகத்தை காந்தியடிகள் எவ்வாறு ஒரு செயல்உத்தியாகப் பயன்படுத்தினார்? ஈ) சம்பரான் சத்தியாகிரகம் பற்றி தாங்கள் அறிவது என்ன?
Answers
Answered by
0
காந்தி மற்றும் மக்கள் தேசியம்
- காந்தியடிகள் டர்பனில் இருந்து பிரிட்டோரியாவுக்கு ரயிலில் பயணம் மேற்கொண்ட போது முதல் வகுப்பு பெட்டியிலிருந்து பீட்டர் மாரிட்ஸ்பர்க் ரயில் நிலையத்தில் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டார்.
- இதுவே காந்தியடிகளின் வாழ்க்கையில் திருப்பு முனையை ஏற்படுத்திய சம்பவம் ஆகும்.
- காந்தியடிகளின் வாழ்க்கையில் மாற்றத்தை உருவாக்கிய படைப்புகள் டால்ஸ்டாயின் கடவுளின் அரசாங்கம் உன்னில் உள்ளது, ஜான் ரஸ்கின் அண்டூ திஸ் லாஸ்ட் மற்றும் தாரோவின் சட்டமறுப்பு முதலியன புத்தகங்கள் ஆகும்.
- காந்தியடிகள் உண்மையின் வடிவமாக சத்தியாகிரகத்தை செயல் உத்தியாகப் பயன்படுத்தினார்.
- சம்பரானில் தீன் காதியா என்ற முறையில் ஐரோப்பியர்களால் விவசாயிகள் பாதிக்கப்பட்டதை, காந்தியடிகள் எதிர்த்து வெற்றி அடைந்த நிகழ்வே சம்பரான் சத்தியாகிரகம் ஆகும்.
Similar questions