தாமிரபரணி ஆற்றின் துணை ஆறுகளின் பெயர்களை எழுதுக
Answers
Answered by
4
தாமிரபரணி ஆற்றின் துணை ஆறுகளின் பெயர்கள்
தாமிரபரணி ஆறு
- தாமிரம் (காப்பர்) மற்றும் வருணி (சிற்றோடைகள்) என்ற வார்த்தைகளில் இருந்து தாமிரபரணி என்ற பெயர் வந்தது.
- தாமிரபரணி நீரின் செந்நிறத் தோற்றத்திற்கு காரணம், அந்த ஆறுகளில் கரைந்து உள்ள செம்மண் துகள்கள் ஆகும்.
- அம்பா சமுத்திரம் வட்டம் பாப நாசத்திலுள்ள மேற்கு தொடர்ச்சி மலையின் பொதிகை மலை முகடுகளில் தாமிரபரணி தோன்றுகிறது.
- தாமிரபரணி நதி ஆனது திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களின் வழியே பாய்ந்து இறுதியில் வங்கக் கடலில் கலக்கிறது.
துணை ஆறுகள்
- தாமிரபரணி ஆற்றின் துணை ஆறுகள் காரையாறு, சேர்வலாறு, மணி முத்தாறு, கடனா நதி, பச்சையாறு, சிற்றாறு மற்றும் இராம நதி முதலியன ஆகும்.
Similar questions