தொழில் முனைவு என்றால் என்ன?
Answers
Answered by
2
Explanation:
தொழில் முனைவு அல்லது முயற்சியாண்மை என்பது அபாயத்தை எதிர்பார்த்து பொருட்கள், சேவைகள் உற்பத்தி தொடர்பில் தீர்மானம் எடுப்பதும், உற்பத்திக்கருமங்களை ஒழுங்கமைப்பதும், அவற்றை செயற்படுத்துவதும் ஆகும்.
முயற்சியாண்மை என்பதை பல்வேறு வணிக ஆய்வாளர்களும் பல்வேறு விதமாக வரையருத்துள்ளார்கள். பொதுவாக முயற்சியாண்மை என்பது, வணிக வாய்புக்களை இனம் கண்டு, ஆபத்துகளுக்கு முகம் கொடுத்து மனித தேவைகளையும் விருப்பங்களையும் திருப்தி செய்வதற்காக காலம், செல்வம், திறமை போன்றவற்றை ஈடுபடுத்தி போட்டியான உலகில் புதியன படைத்தது நாட்டின் தேசிய உற்பத்திக்கு பெறுமதியை சேர்த்தலும், நிலவுகின்ற பொருளாதார முறையினுள் மாற்றங்களை கொண்டுவருவதற்கும் பங்களிப்பு செய்தல் ஆகும்.
Answered by
0
தொழில் முனைவு
தொழில் முனைவோர்
- புதிய சிந்தனைகள் மற்றும் வணிக செயல்முறைகள் ஆகியவற்றிற்கு புத்தாக்கம் புனைபவரே ஒரு தொழில் முனைவோர் என அழைக்கப்படுகிறார்.
- சிறந்த நிர்வாகத் திறன்கள், வலிமையான குழுவை அமைக்கும் திறமைகள் மற்றும் தேவையான தலைமைக்கான பண்புகள் முதலியன ஒரு தொழில் முனைவோரிடம் அவசியம் காணப்படும்.
- தொழில் முனைவோர் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி மற்றும் தலா வருமானம் அதிகமாக முக்கிய பங்கு வகிக்கின்றனர்.
தொழில் முனைவு
- தொழில் முனைவு என்பது தொழில் முனைவோர் தங்கள் தொழிலை முன்னேற்றம் அடைய மேற்கொள்ளும் செயல்முறைகள் ஆகும்.
- மேலும் தொழில் முனைவு என்பது ஒன்றை உருவாக்குவது மற்றும் அவற்றை மேம்படுத்துவது ஆகிய இரண்டிற்கும் இடையே உள்ள திறன் ஆகும்.
Similar questions