மனித இதயத்தின் அமைப்பு மற்றும் செயல்படும் விதத்தினை விவரி.
Answers
Answered by
12
மனித இதயத்தின் அமைப்பு மற்றும் செயல்படும் விதம்
- இரத்தத்தினை இரத்த நாளங்களின் வழியாக உந்தித் தள்ளும் தசையினால் ஆன விசை இயக்க உறுப்பிற்கு இதயம் என்று பெயர்.
- மனித இதயம் ஆனது நுரையீரலுக்கு இடையில், மார்புக்குழியில், உதரவிதானத்திற்கு மேலாக சற்று இடது புறம் சாய்ந்த நிலையில் அமைந்து உள்ளது.
- இதயம் கார்டியாக் தசை என்ற சிறப்புத் தன்மை வாய்ந்த தசையினால் ஆனது ஆகும்.
- இதயத்தினை சூழ்ந்துள்ள உறை பெரிகார்டியல் எனும் இரண்டு அடுக்கினால் ஆன பாதுகாப்பு உறை ஆகும்.
- இதயத்தில் மெல்லிய தசைகளால் ஆன இரு அறைகள் ஆர்டிக்கிள்கள் என்றும் தடித்த தசையினாலான இரு அறைகள் வெண்ட்ரிக்கிள்கள் என்றும் அழைக்கப்படுகிறது.
- பெருஞ்சிரை, கீழ் பெருஞ்சிரை மற்றும் கரோனரி சைனஸ் மூலம் ஆக்சிஜன் குறைந்த இரத்ததினை வலது ஆரிக்கிள் பெறுகிறது.
- ஆக்சிஜன் மிகுந்த இரத்தத்தினை நுரையீரலிலிருந்து இடது ஆரிக்கிள் பெறுகிறது.
- வலது, இடது ஆரிக்கிள்கள் முறையே வலது, இடது வெண்ட்ரிக்கிள்களுக்கு இரத்தத்தினை அளிக்கிறது.
- இதயத்தில் இருந்து அதிக விசையுடன் இரத்தத்தை உந்தி செலுத்துவதால் வலது, இடது வெண்ட்ரிக்கிளின் சுவர்கள் தடித்து காணப்படுகின்றன.
Similar questions