சூசனின் தகப்பனார், மிகவும் சோர்வடைந்து அடிக்கடி சிறுநீர் கழிக்கிறார். மருத்துவ பரிசோதனைக்குப் பின்னர், அவரது இரத்த சர்க்கரை அளவைப் பராமாரிக்க தினமும் ஊசி மூலம் மருந்து செலுத்திக் கொள்ள அறிவுறுத்தப்பட்டார். அவருக்கு இந்நிலை ஏற்படக் காரணமென்ன? இதனை தடுக்கும் வழி முறைகளைக் கூறுக
Answers
Answered by
1
சகோதரி இங்கே எங்களுக்கு தமிழ் மொழிக்கான பதில்கள் கிடைக்காது.எனக்கு தமிழ் தெரியும் ஆனால் எனக்கு பதில்கள் தெரியாது.
Answered by
0
டயாபடீஸ் மெலிடஸ்
- சூசனின் தகப்பனார், மிகவும் சோர்வடைந்து அடிக்கடி சிறுநீர் கழிக்கிறார்.
- மருத்துவ பரிசோதனைக்குப் பின்னர், அவரது இரத்த சர்க்கரை அளவைப் பராமாரிக்க தினமும் ஊசி மூலம் மருந்து செலுத்திக் கொள்ள அறிவுறுத்தப்பட்டார்.
- அவருக்கு இந்நிலை ஏற்படக் காரணம் அவரது உடலில் இன்சுலின் சுரப்பில் ஏற்பட்ட குறைபாடு ஆகும்.
- இதன் காரணமாக அவருக்கு டயாபடீஸ் மெலிடஸ் என்னும் நீரிழிவு நோய் உருவாகிறது.
- இரத்த சர்க்கரை அளவு அதிகரித்தல் (ஹைபர் கிளைசீமியா), சிறுநீரில் அதிகமான குளுக்கோஸ் வெளியேறுதல் (கிளைக்கோசூரியா), அடிக்கடி சிறுநீர் கழித்தல் (பாலியூரியா), அடிக்கடி தாகம் எடுத்தல் (பாலிடிப்சியா) மற்றும் அடிக்கடி பசி எடுத்தல் (பாலிஃபேஜியா) முதலியன டயாபடீஸ் மெலிடசின் அறிகுறிகள் ஆகும்.
தடுக்கும் வழிமுறைகள்
- தினசரி உடற்பயிற்சி, அதிக கொழுப்பு மற்றும் இனிப்பு உள்ள பொருட்களை தவிர்த்தல், உடல் எடையினை பராமரித்தல் முதலியன முறைகளை பின்பற்றினால் டயாபடீஸ் மெலிடஸ் நோயினை தடுக்கலாம்.
Similar questions