மண்ணரிப்பிற்கான காரணிகள் யாவை?
Answers
Answered by
0
மண்ணரிப்பிற்கான காரணிகள்
மண்ணரிப்பு
- மட்கிய இலை, தழைகள், தாது உப்புக்கள் போன்ற தாவரங்கள் வளர்ச்சி அடைவதற்கு தேவையான முக்கிய ஊட்ட பொருட்களைக் கொண்டவையே மண்ணின் மேலடுக்குகள் ஆகும்.
- மண்ணின் மேல் அடுக்கு மண் துகள்கள் அகற்றப்படுவது மண்ணரிப்பு என்று அழைக்கப்படுகிறது.
- அதாவது மேலடுக்கு மண் ஆனது காற்று மற்றும் நீரோட்டத்தினால் அடித்துச் செல்லப்படுவதால் ஏற்படுவதே மண்ணரிப்பு ஆகும்.
மண்ணரிப்பிற்கான காரணிகள்
- பெரு வெள்ளம், மனிதரின் நடவடிக்கைகள், கால்நடைகளின் அதிக மேய்ச்சல், வேகமாக வீசும் காற்று, நிலச்சரிவு, வேளாண்மை, காடு அழிப்பு மற்றும் சுரங்கங்கள் போன்றவை மண்ணரிப்பு உண்டாவதற்கான காரணிகள் ஆகும்.
- மண்ணில் உள்ள மட்கு, ஊட்டச் சத்துகள், வளங்கள் முதலியன மண்ணரிப்பினால் குறைவதினால் மண் அரிப்பு ஏற்பட்ட பகுதியில் உள்ள மண்ணின் வளம் குறைகிறது.
Similar questions