மூவிணைவு பற்றி வரையறு.
Answers
Answered by
1
மூவிணைவு
- ஒரு தாவரத்தில் உள்ள மகரந்தத்தூள், சூலகத்தை அடையும்போது கருவுறுதல் நிகழ்கிறது.
- மகரந்தத்தூள் ஒரு சிறிய குழாய் போன்ற அமைப்பை உருவாக்குகிறது.
- இந்த மகரந்தகுழாய்கள் மூலம் மகரந்தத்தூளின் உள்ளிருக்கும் பொருட்கள் கடத்தப்படுகிறது.
- சூல் தண்டு மற்றும் சூல் முடியில் உள்ள திசுக்கள் மகரந்தகுழாய்கள் வழியாக சென்று சூலகத்தை அடைகின்றன.
- இதன் விளைவாக உருவாகும் செல்லானது பகுப்படைந்து இரண்டு ஆண் இனச்செல்களை உருவாக்குகிறது.
- ஓர் ஆண் இனச்செல் அண்டத்துடன் இணைந்து சின்கேமி என்னும் இரட்டைமய சைக்கோட்டை தோற்றுவிக்கிறது.
- மற்றொரு ஆண் இனச்செல் இரட்டைமய உட்கருவுடன் இணைந்து முதன்மை கருவூண் உட்கருவை உண்டாக்குகிறது.
- இதனை மூவிணைவு என்றும் கூறுவர்.
- மூவிணைவிற்கு பின்னர் கருவூண் உட்கரு கருவூணாக மாறுகிறது.
- இது தாவரங்களுக்கு ஊட்டம் அளிக்கிறது.
Answered by
1
இரண்டாவது ஆண் பாலணு (n) மேலும் நகர்ந்து இரண்டு ஒற்றை மய (haploid அல்லது Monoploid) துருவ உயிரணுக்கள் அல்லது இரண்டாம் நிலை உயிரணுக்களுடன் (n)+(n) இணைந்து மும்மடி அல்லத மும்மய (3n) (Triploid) முதல்நிலைக் கருவூண் உயிரணுவை தோற்றுவிக்கிறது. இவ்வாறு இந்த மூன்று உயிரணுக்களை உள்ளடக்கிய இணைதல் நிகழ்ச்சிக்கு மூவிணைவு (Triple Fusion) என்று பெயர்.இந்நிகழ்விற்கு உடல் கருவுருதல் எனவும் அழைக்கப்படுகிறது. சில தாவரங்களில் இந்த உயிரணு பண்மயத்தன்மையுடன் காணப்படலாம்..இவ்வாறு உருவான கருவூண் உயிரணு ஊட்டத்திசுவாக வளர்ந்து முளை சூழ்தசையை (Endosperm) தோற்றுவிக்கிறது.இந்த ஊட்டச்சத்துள்ள திசுவானது வளரும் கருவுக்கு உணவூட்டத்தை அளிக்கிறது.கருவுற்ற பெண் முட்டையைச் (சூழ்) சூழ்ந்துள்ள சூற்பை கனியாக மாறி விதையை (சூல்) பாதுகாக்கிறது
Similar questions