கூற்று: டயாபடிஸ் மெல்லிடஸ் இரத்த சர்க்கரை அளவை அதிகரிக்கிறது. காரணம்: இன்சுலின் இரத்த சர்க்கரை அளவைக் குறைக்கிறது.
Answers
Answered by
0
கூற்று மற்றும் காரணம்
- கூற்று மற்றும் காரணம் இரண்டுமே சரி.
- ஆனால் காரணம் கூற்றிற்கான சரியான விளக்கம் அல்ல.
விளக்கம்
- டயாபடிஸ் மெல்லிடஸ் என்னும் நோயானது இன்சுலின் இயல்பாக சுரப்பதை காட்டிலும் ஏதேனும் குறைபாடு இருந்தால் ஏற்படுகிறது.
- சிறுநீர் கழிக்கும்போது அதிகமான அளவில் குளுக்கோஸ் வெளியேறுதல், அடிக்கடி தண்ணீர் குடிக்க தூண்டுதல், அடிக்கடி பசி எடுத்தல் மற்றும் சிறுநீர் கழித்தல் ஆகியவை டயாபடிஸ் மெல்லிடஸ் என்னும் நோயின் அறிகுறிகளாகும்.
- இரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிப்பதற்கு இன்சுலின் சுரப்பில் குறைபாடு இருப்பதே காரணம் ஆகும்.
- இன்சுலின் என்னும் ஹார்மோன் பீட்டா செல்களால் சுரக்கப்படுகிறது.
- இரத்தத்தில் குளுக்கோஸ் அளவை பாராமரிப்பதற்கு இன்சுலின் பயன்படுகிறது.
- டயாபடிஸ் மெல்லிடஸ் இரத்த சர்க்கரை அளவை அதிகரிக்கிறது.
- இதற்கு இன்சுலின் சுரப்பில் குறைபாடு இருப்பதே காரணம் ஆகும்.
- எனவே காரணம் கூற்றிற்கான சரியான விளக்கம் அல்ல.
Similar questions
Chemistry,
5 months ago
Computer Science,
5 months ago
Physics,
11 months ago
Chemistry,
11 months ago
Math,
1 year ago