உயிரெழுத்து, பன்னிரண்டு, திருக்குறள், நாலடியார் - இச்சொற்களில் எவ்வகை ஈற்றெழுத்துக்கள் அமைந்துள்ளன?
Answers
Answered by
16
ஈற்றெழுத்துக்கள்
- ஒரு சொல்லின் இறுதியில் இடம்பெற்று உள்ள எழுத்தே ஈற்றெழுத்து ஆகும்.
- ஈற்றெழுத்துக்கள் உயிரீறு, மெய்யீறு என இரு வகையாக பிரிக்கப்பட்டு உள்ளது.
உயிரீறு
- நிலை மொழியின் இறுதி எழுத்து உயிர் மெய்யாக காணப்பட்டாலும், அதன் இறுதி எழுத்து உயிர் எழுத்தாக இருப்பது உயிரீறு என அழைக்கப்படுகிறது.
(எ.கா)
- பன்னிரண்டு (பத்து + இரண்டு), திருக்குறள் (திரு + குறள்), நாலடியார் (நான்கு + அடியார்) முதலிய சொற்களில் நிலை மொழியின் இறுதியில் உள்ள உயிர்மெய் எழுத்தின் இறுதி வடிவம் உயிர் எழுத்தாக உள்ளதால் இது உயிரீறு ஆகும்.
மெய்யீறு
- நிலை மொழியின் இறுதி எழுத்து மெய் எழுத்தாக இருப்பது மெய்யீறு என அழைக்கப்படுகிறது.
(எ.கா)
- உயிரெழுத்து (உயிர் + எழுத்து) என்ற சொல்லின் நிலை மொழியின் இறுதி எழுத்து மெய்யாக உள்ளதால் அது மெய்யீறு ஆகும்.
Similar questions