"பற்று நீங்கியவனுக்கு உண்டாவது - பற்றற்றவனைப் பற்றுவதால் உண்டாவது அ) பற்றுகள் பெருகும் - பொருள்களின் இன்பம் பெருகும் ஆ) பற்றுகள் அகலும் - பொருள்களின் துன்பம் அகலும் இ) பொருள்களின் துன்பம் அகலும் - பற்றுகள் அகலும் ஈ) பொருள்களின் இன்பம் பெருகும் - பற்றுகள் பெருகும் "
Answers
பொருள்களின் துன்பம் அகலும் - பற்றுகள் அகலும்
துறவு
- உலகப் பொதுமறை என புகழப்படும் திருக்குறளில் உள்ள துறவு என்ற அதிகாரத்தில் பற்றினை பற்றி கூறப்பட்டுள்ளது.
பற்று நீங்கியவனுக்கு உண்டாவது
- யாதனின் யாதனின் நீங்கியான் நோதல் அதனின் அதனின் இலன்
பொருள்
- ஒருவன் எந்த எந்த பொருட்களின் மீது வைத்திருந்த பற்றினை நீங்கிக் கொண்டானோ அந்த அந்த பொருட்களினால் அவனுக்கு துன்பம் வராது.
பற்றற்றவனைப் பற்றுவதால் உண்டாவது
- பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப் பற்றுக பற்று விடற்கு
பொருள்
- எந்த ஒன்றின் மீது உள்ள பற்றினை நீக்க எண்ணுபவர் பற்றில்லாமல் வாழும் துறவிகளை பற்றி நிற்க வேண்டும்.
- இதனால் அவனிடமிருந்து அனைத்து பற்றும் நீங்கிவிடும்.
Answer:
341 - யாதனின் யாதனின் நீங்கியான் நோதல்
அதனின் அதனின் அலன்.
ஒருவன் பல வகையான பற்றுகளில் எந்த ஒன்றை விட்டு விட்டாலும், குறிப்பிட்ட அந்தப் பற்று காரணமாக வரும் துன்பம், அவனை அணுகுவதில்லை.
342 - வேண்டினுண் டாகத் துறக்க துறந்தபின்
ஈ.ண்டியற் பால பல.
ஒருவனைத் துன்பம் துளைத்தெடுக்காமல் இருக்க எல்லாம் இருக்கும் போதே அவற்றைக் துறந்து விடுவானேயானால், அவன் உலகில் பெறக்கூடிய இன்பங்கள் பலவாகும்.
343 - அடல்வேண்டும் ஐந்தன் புலத்தை விடல்வேண்டும்
வேண்டிய வெல்லாம் ஒருங்கு.
ஐம் புலன்களையும் அடக்கி வெல்வதும், அப்புலன்கள் விரும்புகின்றவற்றையெல்லாம் விட்டுவிடுவதும் துறவுக்கு இலக்கணமாகும்.
344 - இயல்பாகும் நோன்பிற்கொன் றின்மை உடைமை
மயலாகும் மற்றும் பெயர்த்து.
ஒரு பற்றும் இல்லாதிருத்தலே துறவுக்கு ஏற்றதாகும். ஓன்றன் மேல் பற்று வைப்பினும், அது மேன்மேலும் பற்றுகளைப் பெருக்கி மயங்கச் செய்துவிடும்.
345 - மற்றுந் தொடர்ப்பா டெவன்கொல் பிறப்பறுக்கல்
உற்றார்க் குடம்பும் மிகை.
பிறந்ததால் ஏற்படும் துன்பத்தைப் போக்க முயல்கின்ற துறவிகளுக்கு அவர்களின் உடம்பே மிகையான ஒன்றாக இருக்கும்போது, அதற்கு மேலும் வேறு தொடர்பு எதற்காக?
346 - யானென தென்னுஞ் செருக்கறுப்பான் வானோர்க்
குயர்ந்த உலகம் புகும்.
யான், எனது என்கின்ற ஆணவத்தை அறவே விலக்கி விட்டவன், வான்புகழையும் மிஞ்சுகின்ற உலகப் புகழுக்கு உரியவனாவான்.
347 - பற்றி விடாஅ இடும்பைகள் பற்றினைப்
பற்றி விடாஅ தவர்க்கு.
பற்றுகளைப் பற்றிக்கொண்டு விடாதவர்களைத் துன்பங்களும் விடாமல் பற்றிக் கொள்கின்றன.
348 - தலைப்பட்டார் தீரத் துறந்தார் மயங்கி
வலைப்பட்டார் மற்றை யவர்.
அரைகுறையாக இல்லாமல் அனைத்தும் துறந்தவர்களே உயர்ந்த நிலையை அடைவார்கள். அவ்வாறு துறவாதவர்கள் அறியாமையென்னும் வலையில் சிக்கியவர்களாவார்கள்.
349 - பற்றற்ற கண்ணே பிறப்பறுக்கும் மற்று
நிலையாமை காணப் படும்.
பற்றுகளைத் துறந்துவிட்டால், பிறப்பில் ஏற்படும் இன்ப துன்பங்கள் வருவதில்லை. இல்லையேல், அந்த இன்ப துன்பங்கள் மாறிமாறி வரக்கூடிய நிலையாமை தோன்றும்.
350 - பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப்
பற்றுக பற்று விடற்கு.
எதிலும் பற்றில்லாதவராக யார் இருக்கிறாரோ அவரிடம் மட்டும் பற்றுக் கொள்ள வேண்டும். துறவறத்தினர் தம் பற்றுகளை விட்டொழிப்பதற்கு அத்தகையோரிடம் கொள்ளும் பற்றுதான் துணை நிற்கும்.
Explanation: