India Languages, asked by anjalin, 10 months ago

இட‌ப்ப‌க்க மூளை‌யி‌ல் செ‌ய்‌திக‌ள் ப‌தி‌வதா‌ல் ஏ‌ற்படு‌ம் ந‌ன்மைக‌ள் கு‌றி‌த்த சுஜாதா‌வி‌ன் கரு‌த்து‌க்களை ‌விள‌க்குக‌.

Answers

Answered by ashauthiras
0

Answer:

மனித மூளை மனித நரம்பு மண்டலத்தின் தலைமையானதும், மனித உறுப்புகளில் சிக்கலானதும் ஆகும். மனித மூளை, விழிப்புணர்வு இன்றியும் இயங்கும், இச்சை இன்றிய செயற்பாடுகளான மூச்சுவிடுதல், சமிபாடு (செரிமானம்), இதயத்துடிப்பு, கொட்டாவி[1] போன்ற செயற்பாடுகளையும்,[2] விழிப்புணர்வுடன் நிகழும் சிந்தனை, புரிதல், ஏரணம் போன்ற சிக்கலான உயர்நிலை செயற்பாடுகளையும் கட்டுப்படுத்துகிறது. மற்ற எல்லா உயிர்களையும் விட இத்தகைய சிக்கலான உயர்நிலை செயற்பாடுகளைச் சிறப்பாக கையாளும் திறனை மனித மூளை பெற்றிருக்கிறது.

மனிதனின் மூளை, மற்ற பாலூட்டிகளின் மூளையின் பொது வடிவத்தினை பலவாறு ஒத்திருப்பினும், அவற்றின் மூளைகளைக் காட்டிலும் உடல் எடை-மூளை அளவு விகிதத்தில் குறைந்தது ஐந்து மடங்கு பெரியது. இதற்குக் காரணம், மனித மூளையின் நன்கு விரிவடைந்த பெருமூளைப் புறணிப் (cerebral cortex) பகுதியாகும். நரம்பிழையத்தால் (neural tissue) உருவாகி, பல தொடர் மடிப்புகளை கொண்ட இப்பகுதி மனிதனின் முன்மூளையில் அமைந்துள்ளது. குறிப்பாக, பிற விலங்குகளில் இருந்து மனிதனைப் பிரித்துக்காட்டும் சிறப்பு செயல்பாடுகளான, தற்கட்டுப்பாடு, திட்டமிடல், பகுத்தறிதல், கற்றறிதல் ஆகியவற்றிக்குக் காரணமான மூளையின் முன் மடல்கள் மனித மூளையில் நன்கு விரிவடைந்து காணப்படுகின்றன. மேலும், கண் பார்வைக்குக் காரணமான பகுதியும் மனித மூளையில் நன்கு வளர்ச்சி பெற்றுள்ளது குறிப்பிடத் தக்கது.

மூளையின் படிவளர்ச்சியில், மிக முந்திய சிறிய பாலுட்டியான மூஞ்சூறில் இருந்து மனிதக் குரங்கு வழியாக உயர்நிலை விலங்கினங்களில் ஒன்றான மனிதன் வரை மூளை-உடல் அளவு விகிதம் படிப்படியாக உயர்ந்துள்ளது; இதை மூளைப் பருமனாக்கம் (encephalisation) என்று அழைக்கின்றனர். மனித மூளையில் உள்ள சுமார் 50–100 பில்லியன் (5000-10000 கோடி) நரம்பணுக்களில் (1011), சுமார் 10 பில்லியன் நரம்பணுக்கள் (1010) புறணிக் கோபுர உயிரணுக்கள் (cortical pyramidal cells) ஆகும். இவ்வுயிரணுக்கள் தமக்குள் சமிக்கைகளை (குறிகைகளை) அனுப்பி கொள்ள ஏறத்தாழ 100 டிரிலியன் (1014) நரம்பிணைப்புகளைப் பயன்படுத்துகின்றன.

மனித மூளை, தடிப்பான மண்டையோட்டின் எலும்புகளாலும், மூளை முதுகுத் தண்டுநீர்மம் (cerebrospinal fluid) என்னும் நீர்மத்தாலும், அதிர்வுகளிலிருந்தும், வெளிச் சேதங்களிலிருந்தும், குருதி-மூளை வேலி (blood-brain barrier) என்னும் அமைப்பின் மூலம் இரத்த மண்டத்திலிருந்தும், இரத்தம் மூலம் பரவும் நோய்களில் இருந்தும் தீங்குறாமல் பெரிதும் பாதுகாக்கப்படுகிறது. ஆனாலும், அதன் மென்மையான தன்மையால் பல வகை நோய்களாலும், சேதங்களாலும் தீங்குகள் ஏற்படுவது தவிர்க்க இயலாதது.

பொதுவாக மூளையில் ஏற்படும் சேதங்கள், உள் தலை காயங்கள் (closed head injuries) எனப்படும் வகையை சார்ந்த, தலையில் ஏற்படும் காயம், மூளையில் இரத்த தடை ஏற்படுவதால் ஏற்படும் பக்கவாதம் (stroke), நரம்பு நச்சுகள் (neurotoxin) எனப்படும் வேதியியல் நச்சுப் பொருட்களால் பாதிக்கப்படுதல் ஆகியன குறிப்பிடத் தக்கவை. மூளை தொற்றுநோய்களால் பாதிக்கப்படுவது மிக அரிதானது. ஏனெனில், இரத்த மண்டலத்தில் கலந்து உடல் உறுப்புக்களைத் தாக்கக் கூடிய பெரும்பாலான பாக்டீரியா கிருமிகளை, மனித மூளையில் குருதி-மூளை வேலி என்ற அமைப்பு வடிகட்டி விடுவதன் மூலம், மூளை தொற்றுநோய் நுண்ணுயிரிகளில் இருந்து பெரும்பாலும் பாதுகாக்கப் படுகிறது. இருப்பினும், மூளை பாக்டடீரியாவால் அரிதாக தாக்கப்படும் போது, பிறஒருளெதிரி (antibodies) மூலம் சிகிச்சை அளிப்பது மிக கடினமானதாகிறது. ஏனெனில் இதே குருதி-மூளை வேலி அமைப்பு நோய் எதிர்ப்பு மருந்துகளையும் தடுத்து நிறுத்தி விடுவதே காரணம். தீநுண்மம் (வைரசு) எளிதாக குருதி-மூளை வேலியை தாண்ட வல்லவை. இவை இரத்தத்தில் உள்ள வெண்குருதியணுக்களுடன் சேர்ந்து தாண்டுகின்றன. இவை தவிர பொதுவாகக் காணப்படும் பல மரபியல் நோய்களும்மனிதமூளை மூளையைத் தாக்க வல்லவை. அவற்றுள், நடுக்குவாதம் (பார்கின்சன் நோய்), உடலின் நோய் எதிர்ப்பு மண்டலமே நரம்பு மண்டலத்தை தாக்கும் மல்டிபிள் சுகுலோரோசிஸ் (multiple sclerosis) ஆகியவை முக்கியமானவை. உளவியல் நோய்களான உளச்சோர்வு, தாழ்வு மனப்பான்மை, மந்த அறிவு ஆகியவையும் மூளையில் ஏற்படும் மாற்றங்களால் தோன்றுகின்றன.

Explanation:

Answered by steffiaspinno
0

இட‌ப்ப‌க்க மூளை‌யி‌ல் செ‌ய்‌திக‌ள் ப‌தி‌வதா‌ல் ஏ‌ற்படு‌ம் ந‌ன்மைக‌ள் கு‌றி‌த்த சுஜாதா‌வி‌ன் கரு‌த்து‌க்க‌ள்  

  • மூளை‌க்கு‌ச் செ‌ல்ல‌க்கூடிய நர‌ம்புக‌ளி‌ல் இட வல மா‌ற்ற‌ங்க‌ள் ஏ‌ற்படு‌ம்.
  • அதாவது வல‌‌ப்பக்க‌ச் செ‌ய்‌திக‌ள் மூளை‌யி‌ன் இடது பா‌தி‌க்கு‌ம், இட‌ப்ப‌க்க‌ச் செ‌ய்‌திக‌ள் வலது பா‌தி‌க்கு‌ம் இட‌ம் மாறு‌ம்.
  • ந‌ம் மூளை‌யி‌ன் இடது பா‌தி‌யி‌ன் அ‌திக‌ப்படியான செ‌ல்வா‌க்‌கு தா‌ன் ந‌ம்‌மி‌ல் பெரு‌ம்பாலானோ‌ர் வலது கை‌க்கார‌ர்களாக இரு‌ப்பத‌ற்கு‌‌க் காரண‌ம் ஆகு‌ம்.
  • மூளை‌யி‌ன்  இடது பா‌தி‌ தா‌ன் பேச, எழுத, கண‌க்‌கிட, த‌ர்‌க்க ‌ரீ‌தி‌யி‌ல் ‌சி‌ந்‌தி‌க்க உதவு‌கிறது.
  • இடது பா‌தி தா‌ன் ‌அ‌திக ம‌தி‌ப்பெ‌‌ண், ‌பிர‌ச்சனைகளை அலசுவது, சதுர‌ங்க‌‌ம் போ‌ன்ற ‌விளையா‌ட்டி‌ல் ‌சி‌‌ற‌ப்பத‌ற்கு காரண‌ம் ஆகு‌ம்.
  • இடது பா‌தி‌யி‌‌ன் செ‌ல்வா‌க்கு அ‌திக‌ம் உ‌ள்ளவ‌ர்க‌ள் ப‌ட்டய‌க் கண‌க்க‌ர்க‌ள், கண‌க்கு ஆ‌சி‌ரிய‌ர்க‌ள், இ‌ந்‌திய ஆ‌ட்‌சி‌ப் ப‌ணி‌க்கு படி‌ப்பவ‌ர்க‌ள், வருமானவ‌ரி அ‌திகா‌ரிக‌ள் எ‌ன்னு‌ம் ‌நிலை‌யினை அடை‌கி‌ன்றன‌ர் என சுஜாதா கூறு‌கிறா‌ர்.
Similar questions