சங்ககாலத் தமிழர்களின் வானியல் அறிவினை முதுகண்ணனார் பாடல்வழிப் பலப்படுத்துக.
Answers
Answer:
சங்க கால தமிழர்கள் வானத்தையே தன் வீட்டின் மேற் கூரையாகக் கொண்டவர்கள். வானத்தில் நாள்தோறும் நிகழ்கின்ற வானியல் நிகழ்வுகளையும், மாற்றங்களையும் கூர்ந்து கவனித்து வானியல் தொடர்பான சிந்தனைகளை இவ்வுலகுக்கு எடுத்தியம்பியவர்கள். தமிழகத்தில் வானியல் துறையில் சிறந்து விளங்கிய பலர் வாழ்ந்தனர் என்பதை கணியன் பூங்குன்றனார், கனிமேதாவியார், பக்குடுக்கை நன்கணியார் முதலிய பெயர்கள் சான்று பகர்கின்றன. சிலேட்டர் என்னும் வானியல் அறிஞர் தமிழருடைய வானநூற்கணித முறையே வழக்கிலுள்ள எல்லாக் கணிதங்களிலும் நிதானமானது என்னும் கருத்து ஈண்டு நோக்கத்தக்கது.
சங்கத் தமிழர் ஐம்பெரும் பூதங்களின் தோற்றங்களை வெளிப்படுத்தும்போது பரந்து விரிந்த வானத்திலிருந்து காற்றும், காற்றிலிருந்து தீயும், தீயிலிருந்து நீரும், நீரிலிருந்து நிலமும் தோன்றியுள்ள அறிவியல் உண்மையை இவ்வுலகுக்குப் பதிவு செய்துள்ளனர். சித்தர்கள் எனப்படுவோரே அக்கால விஞ்ஞானிகள் ஆவர்
Explanation:
முதுகண்ணனார் பாடல்வழி சங்ககாலத் தமிழர்களின் வானியல் அறிவு
புறநானூறு
- புறநானூறு நூலானது பழந்தமிழர்களின் நாகரிகம், செல்வம், மக்களின் வாழிடங்கள், போர் நிகழ்வுகள், அரசர்கள் வரலாறு, குறுநில மன்னர்கள் வரலாறு, வானவியல், இயற்பியல் போன்ற பல தகவல்கள் இடம்பெற்று உள்ளன.
உறையூர் முதுகண்ணன் சாத்தனார் பாடல்
- உறையூர் முதுகண்ணன் சாத்தனார் பாடிய செஞ்ஞாயிற்றுச் செலவும் அஞ்ஞாயிற்று எனத் தொடங்கும் புறநானூற்று பாடலில் நலங்கிள்ளியின் நாட்டில் கதிரவனின் வீதியையும், அதன் இயக்கத்தினையும், காற்றின் திசையையும், முடிவில்லா வானத்தையும் நேரில் சென்று அறிந்தவர்கள் போல அவற்றின் தன்மையினை கூறும் அறிஞர்கள் உள்ளனர் எனக் கூறப்பட்டுள்ளது.
- இது வானியல் பற்றிக் கணிப்பவர்கள் அன்றே இருந்தார்கள் என்பதைத் தெரிவிக்கும் பாடல் ஆகும்.