கொழுஞ்சோறு - புணர்ச்சி விதி கூறுக
Answers
Answered by
37
கொழுஞ்சோறு
புணர்ச்சி
- நிலைமொழியின் இறுதி எழுத்தும், வருமொழியின் முதல் எழுத்தும் இணைவதை புணர்ச்சி ஆகும்.
- இரு எழுத்துகளும் புணர்ச்சியில் ஈடுபடும் போது, புதிய எழுத்துக்கள் தோன்றல், எழுத்து திரிதல், எழுத்து நீக்கப்படுதல் அல்லது எந்த வித மாற்றமும் ஏற்படாமல் புணர்தல் முதலியன நிகழும்.
கொழுஞ்சோறு
- கொழுஞ்சோறு என்ற சொல்லை பிரித்தால் கொழுமை + சோறு என வரும்.
- ஈறுபோதல் என்ற விதியின்படி கொழுமை என்ற சொல்லில் உள்ள மை என்ற ஈற்று எழுத்து கெட்டு கொழு + சோறு என வரும்.
- இனமிகல் என்ற விதியின்படி ச் என்ற வல்லின மெய்யெழுத்து இனமான ஞ் என்ற மெல்லின மெய்யெழுத்து சேர்ந்து கொழு + ஞ் + சோறு என்றாகி கொழுஞ்சோறு என புணரும்.
Similar questions