ஆசிரியப்பாவிற்குரிய சீரும் தளையும் யாவை?
Answers
Answered by
3
ஆசிரியப்பாவிற்குரிய சீர்
- சீர்கள் அசைகள் சேர்ந்து அமைவதால் பிறக்கிறது. ஆசிரியப்பாவிற்கு உரிய சீர் இயற்சீர் ஆகும்.
- இதனை ஆசிரிய உரிச்சீர் என்றும் அழைப்பர்.
- ஆசிரிய உரிச்சீர் ஆனது இரு நேரீற்று ஈரசைச் சீர்கள் (தேமா, புளிமா) மற்றும் இரு நிரையீற்று ஈரசைச் சீர்கள் (கருவிளம், கூவிளம்) என நான்கு வகைப்படும்.
- சில சமயம் நேரீற்று மூவசைச் சீர்களால் அமைந்த காய்ச்சீர் கலந்து வரும்.
ஆசிரியப்பாவிற்குரிய தளை
- ஆசிரியப்பாவிற்குரிய தளைகள் இரண்டு.
- அவை நேரொன்றாசிரியத் தளை மற்றும் நிரையொன்றாசிரியத் தளை ஆகும்.
- நேரொன்றாசிரியத் தளை என்பது மாமுன் நேர் ஒன்றி வருவது ஆகும்.
- நிரையொன்றாசிரியத் தளை என்பது விளம்முன் நிரை ஒன்றி வருவது ஆகும்.
Answered by
0
Answer :-
சஆ சிரி பாவிற் குரிய சீரும் தளையும் யாவை ரியப் பாவி ற்குரிய
Similar questions