தாம் வாழ்ந்த காலகட்டத்தின் நாகரிகப் புதையலாக நாட்குறிப்பைப் பயன்படுத்தியவர் ஆனந்தரங்கர் என்பதை நிறுவுக
Answers
Answered by
1
தாம் வாழ்ந்த காலகட்டத்தின் நாகரிகப் புதையலாக நாட்குறிப்பைப் பயன்படுத்தியவர் ஆனந்தரங்கர்
ஆனந்தரங்கரின் நாட்குறிப்பு
- ஆனந்தரங்கரின் நாட்குறிப்பு ஆனது 18 ஆம் நூற்றாண்டில் இருந்த தமிழ் நாடு மற்றும் புதுவை வரலாற்றினை அறிந்து கொள்ள உதவுகிறது.
- ஆனந்தரங்கர் எழுதிய நாட்குறிப்புகள் தமிழில் பன்னிரண்டு தொகுதிகளாக வெளி வந்து உள்ளன.
அரசியல்
- பிரெஞ்சு ஆளுநர் டூமாஸ் நாணய அச்சடிப்பு உரிமை பெற்றது.
- பிரெஞ்சு அரசு தேவனாம் பட்டணத்தைக் கைப்பற்ற நடத்திய போர், ஆம்பூர் போர், தஞ்சைக் கோட்டை முற்றுகை, இராபர்ட் கிளைவ் படையெப்பு முதலியன பற்றி நாட்குறிப்பில் ஆனந்தரங்கர் பதிவு செய்துள்ளார்.
- ஆனந்தரங்கர் தன் நாட்குறிப்பில் பண்பாடு, சமயம், சாதி, நீதி, வணிகம், நம்பிக்கைகள் முதலியன அடங்கிய நிகழ்வுகளை பதிவு செய்துள்ளார்.
தண்டனைகள்
- நீதி வழங்குதல், மரண தண்டனைகள், காதறுத்தல், சாட்டையடி, கிடங்கில் போடுதல், திருடனை கடைத்தெருவில் தூக்கிட்டல் என பல செய்திகளை தன் நாட்குறிப்பில் பதிவு செய்துள்ளார்.
மக்களின் மகிழ்ச்சி
- 1746 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 8 ஆம் தேதி புதுவைக்கு லெபூர்தொனேவின் ஒன்பது கப்பல்கள் புதுவைக்கு வந்தன.
- இதனால் மக்கள் அடைந்த மகிழ்ச்சியினை ஒரு வருணையாளரைப் போல தன் நாட்குறிப்பில் பதிவு செய்துள்ளார்.
- இதன் மூலம் தாம் வாழ்ந்த காலகட்டத்தின் நாகரிகப் புதையலாக நாட்குறிப்பைப் பயன்படுத்தியவர் ஆனந்தரங்கர் என்பது உறுதியாகிறது.
Similar questions