சிங்கி பெற்ற பரிசுப் பொருட்களாகக் குற்றாலக் குறவஞ்சி கூறுவன யாவை?
Answers
Answered by
1
Answer:
cannot understand your launguage
please typ engish
Answered by
9
சிங்கி பெற்ற பரிசுப் பொருட்களாகக் குற்றாலக் குறவஞ்சி கூறுவன
சிலம்பு
- சிங்கன் காலுக்கு மேலே பெரிய விரியன் கடித்துக் கிடப்பதுபோல் இருப்பது என்ன என கேட்க அதற்கு சிங்கி சேலத்து நாட்டில் குறிச்சொல்லியதற்காக பரிசாக பெறப்பட்ட சிலம்பு என்றாள்.
தண்டை
- சிலம்பின் மேலே உள்ள திருகுமுருகு என்ன என்று சிங்கன் கேட்க, கலிங்க நாட்டில் கொடுத்த முறுகிட்ட தண்டை என்று சிங்கி சொன்னாள்.
பாடகம்
- நாங்கூழ்ப்புழு போல நீண்டு குறுகி உள்ளது என்ன என்று சிங்கன் கேட்க பாண்டியனார் மகளுக்கு சொன்ன குறிக்கு அளிக்கப்பட்ட பாடகம் என்று சிங்கி சொன்னாள்.
அணிமணிக் கெச்சம்
- பெரிய தவளையை போல உன் காலில் கட்டப்பட்டு உள்ளது என்ன என சிங்கன் கேட்க அதற்கு இறைவன் திருக்குற்றாலநாதர் கோவில் பெண்கள் தந்த அணிமணிக் கெச்சம் என்று சிங்கி சொன்னாள்.
காலாழி
- சுண்டு விரலில் குண்டலப்பூச்சி போல இருப்பது என்ன என சிங்கன் கேட்க முன்பு நான் கண்டிய தேசத்தில் பெற்ற காலாழி என்று சிங்கி சொன்னாள்.
Similar questions