காலமும் என்ற சொல்லின் இலக்கணக் குறிப்பு
Answers
Answer:
இது முற்றும்மை ஆகும்.
Answer:
1. பெயரெச்சம்:
ஒரு வினைச் சொல்லானது பெயர்ச் சொல்லைக் கொண்டு முடியுமாயின் அது பெயரெச்சம் ஆகும்.
(எ.கா) படித்த மாணவன், வந்த வாகனம், தந்த பணம், கண்ட கனவு, சென்ற நாட்கள்
மேற்கணடவற்றுள் படித்த, வந்த, தந்த, கண்ட, சென்ற போன்றவை பெயரெச்சங்கள் ஆகும்.
பெயரெச்சத்தை எப்படி எளிதாக கண்டுபிடிப்பது?
படித்த மாணவன், வந்த வாகனம், தந்த பணம், கண்ட கனவு, சென்ற நாட்கள் போன்ற வாக்கியங்களைக் கொடுத்து இதன் இலக்கண வகை என்ன என்று கேட்டால். நீங்கள் முதலில் உள்ள படித்த, வந்த, தந்த, கண்ட, சென்ற போன்றவற்றை கணக்கிட்டு தான் பெயரெச்சம் என எண்ண வேண்டும்.
முதலில் படித்த, வந்த, சென்ற போன்ற வார்த்தைகளை நன்றாக உச்சரித்துப் பாருங்கள். அவ்வார்த்தைகள ‘அ’ என்னும் சத்தத்தோடு முடியும்..
விளக்கம்:
படித்த- இதன் கடைசி எழுத்து ‘த’
‘த’ என்ற எழுத்தை பிரித்தால் த்+அ என்று பிரியும்..
இப்படி வார்த்தையின் இறுதியில் ‘அ’ என்னும் சத்தம் ஒலித்தால் அது பெயரெச்சம்தான் என முடிவெடுத்துக் கொள்ளவும்.