“படாஅம் ஈத்த கெடாஅ நல்லிசைக் கடாஅ யானைக் கலிமான் பேக”– இச் சங்கக் கவிதையின் அடிகளில் ஓசை நயமிக்க சொற்களையும் அவற்றிற்கான இலக்கணக் குறிப்புகளையும் எடுத்து எழுதுக.
Answers
Answered by
10
ஒலிக்கோலங்கள்
- சமிக்ஞை மற்றும் இசையில் இருந்து தான் எந்த ஒரு தொன்மையான மொழியும் தொடங்குகிறது.
- இசை மற்றும் இசைக் கருவியோடும் தான் மொழி சார்ந்த கவிதை ஆனது பிறக்கிறது.
- ஓசையும் பொருளும் சேர்ந்து கலை வடிவம் கொள்கின்றன.
(எ.கா)
- படாஅம் ஈத்த கெடாஅ நல்லிசைக் கடாஅயானைக் கலிமான் பேக
விளக்கம்
- இந்த கவிதை வரிகளில் உள்ள ஓசை நயமிக்க சொற்கள் படாஅம், கெடாஅ மற்றும் கடாஅ முதலியன ஆகும்.
- இவற்றிற்கான இலக்கணக் குறிப்பு செய்யுளிசை அளபெடை ஆகும்.
- உயிர் நெடில் ஒலிகளின் வருகையும், சில ஒலிகளும் சில சொற்களும் திரும்ப வரல் தன்மையினைப் பெற்றிருப்பதும், இவற்றோடு சேர்ந்து நிகழ்த்தப் பெறும் சொல் விளையாட்டுகளும் இந்த வரிகளின் மூலம் தெரிய வருகிறது.
- சொற்களின் இடையில் அமைந்துள்ள உயிர் நெடில் எழுத்துக்கள், செய்யுளில் ஓசை நயத்தினை ஏற்படுத்த நீண்டு ஒலிக்கின்றன.
Similar questions