பாரதியின் கடிதம் வாயிலாக நீங்கள் அறிந்துகொண்ட மொழிப்பற்று, சமூகப்பற்று ஆகியவற்றை விவரிக்க.
Answers
Answered by
48
பாரதியின் கடிதம்
- இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற கவிஞராக திகழ்ந்த பாரதியார் அவர்கள் மொழிப்பற்று, சமுதாய மறுமலர்ச்சி, ஆன்மீக சிந்தனை உடையவராக இருந்தார்.
மொழிப்பற்று
- பாரதியார் அவர்கள் 18 மொழிகளை அறிந்தவராக திகழ்ந்தாலும் தன் தாய்மொழியின் மீது பற்றுடையவராக திகழ்ந்தார்.
- இதனை யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதாவ தெங்கும் காணோம் என்ற வரிகள் உணர்த்தும்.
கடிதம்
- பாரதியார் நெல்லையப்பருக்கு எழுதிய கடிதத்தில், தமிழ், தமிழ் தமிழ் என எப்போதும் தமிழை வளர்ப்பதையே கடமையாக கொள்.
- தமிழில் புதிய சிந்தனைகள், புதிய உண்மைகள், புதிய இன்பங்கள் வளர வேண்டும்.
- தமிழ் செழுமை அடைய வேண்டும் என குறிப்பிட்டிருப்பது இவரின் மொழிப்பற்றை பறைச் சாற்றுகிறது.
சமூகப்பற்று
- பெண்களுக்கு சம உரிமை வேண்டும்.
- ஆணும் பெண்ணும் ஓருயிர் இரு தலைகள், அவை ஒன்றுக்கொன்று தாழ்வில்லை.
- பெண்ணை அடிமை செய்வோன், தன் கண்ணைக் குத்திக் கொண்டவன்.
- பெண்ணை அடைத்து வைப்பவன், கண்ணை அடைத்தவன் என எழுதுமாறு நெல்லையப்பரிடம் கூறியது இவரின் சமூக பற்றினை பறைசாற்றுகிறது.
எழுத, பேச
- நெல்லையப்பரிடம் தமிழ்நாடு வாழ்க. நோய்கள் தீர்க. தமிழ்நாட்டில் வீதிதோறும் தமிழ்ப் பள்ளிகள் பெருகுக. அந்த பள்ளிகளில் நவீன கலைகள் எல்லாம் பயிற்சி பெற்று வளர்க என எழுதவும், வணிகமும் இயந்திரங்களும் பெருக வேண்டும் என பேசவும் பாரதியார் அன்புக் கட்டளை விடுத்தார்.
Answered by
12
Answer:
hi thanks for your help
so much
Similar questions