பொறுப்புணர்ச்சியின்றி இருந்த ஊரைத் தன் பொறுப்புணர்வால் மாற்றிய மருதனின் பண்பு நலத்தை விவரிக்க .
Answers
Answered by
20
பொறுப்புணர்ச்சியின்றி இருந்த ஊரைத் தன் பொறுப்புணர்வால் மாற்றிய மருதனின் பண்பு நலம்
பெருமழை
- சம்பா அறுவடை செய்வதற்காக முற்றிய நாற்றினை நட்ட காவிரி கடை மடைக்காரர்களுக்கு அதிர்ச்சி தரும் நிகழ்வாய் அமைந்தது பெருமழை.
- இதனால் பயிர்கள் நீரில் மூழ்கியதை எண்ணி வருத்தம் அடைந்தான் மருதன்.
- மேலும் சில நாட்களுக்கு கனமழை பெய்யும் என வானிலைச் செய்தியும் சொல்லப்பட்டது.
யோசனை
- வளவனாற்றின் வடகரையில் ஏற்பட்டு பெரு வெள்ளத்தினால் நம் ஊரில் உள்ள வயல்கள் மூழ்கி வீணாகிவிடும்.
- இதனை தடுக்க வடிவாய்க்காலில் காட்டாமணுக்கு செடிகளை பிடிங்கிவிட்டால் நீர் வடிவாய்க்காலில் வழிந்தோடிவிடும்.
- இதனால் பயிர்களும் பாதுகாக்கப்படும் என்ற எண்ணம் மருதனுக்கு வந்தது.
உதவி கேட்டும் உதவா மக்கள்
- மீன் பிடித்துக் கொண்டிருந்த மாரிமுத்து, ஊர் பெரியவரான காளியப்பன், முதல் பட்டதாரியான பிரேம்குமார் உள்ளிட்ட பலரிடமும் காட்டாமணுக்கை பிடிங்குவதை பற்றி மருதன் கூறினாலும் யாரும் அவனுக்கு உதவ வரவில்லை.
- இதனால் சோர்ந்து வீடு திரும்பிய மருதன் தன் மனைவி அல்லி அளித்த சுடுகஞ்சி பருகினான்.
தன்கையே தனக்குதவி
- இரவு முழுவதும் தூங்காத மருதன் இடுப்பளவு தண்ணீரில் தனி ஒருவனாக காட்டாமணுக்கு செடிகளை அறுத்து எரிந்தான்.
- இதனை கண்ட அவன் மனைவியும் அவனுடன் சேர்ந்தாள்.
- இதை கண்ட மாரிமுத்து, காளியப்பன் உள்ளிட்டோரும் தன் தவறை உணர்ந்து காட்டாமணுக்கு செடியை அறுத்து எரிந்தனர்.
- இதனால் பெருமழை பெய்தும் வடிவாய்க்கால் வழியே வெள்ளம் சென்றதால் பயிர்கள் காக்கப்பட்டன.
Similar questions
Math,
4 months ago
Accountancy,
4 months ago
English,
9 months ago
English,
9 months ago
Physics,
1 year ago