திருவளர்ச்செல்வன், திருவளர் செல்வன் – இவற்றில் சரியான தொடர் எது? அதற்கான இலக்கண விதி யாது?
Answers
Answered by
23
திருவளர் செல்வன்
- திருவளர்ச்செல்வன், திருவளர் செல்வன் என்ற இருச் சொற்களில் சரியான சொல் திருவளர் செல்வன் என்பது ஆகும்.
வினைத்தொகை
- ஒரு வினைச் சொல்லும், ஒரு பெயர்ச் சொல்லும் அமைந்த கூட்டுச் சொல் வினைத்தொகை ஆகும்.
- முன்னே வரும் வினைச்சொல் ஆனது மூன்று காலத்தையும் குறிப்பால் உணர்த்தும் தன்மை உடையது ஆகும்.
- பின்னே வரும் சொல் பெயர்ச்சொல் ஆகும்.
- (எ.கா) வளர்செல்வன் (வளர்ந்த செல்வன், வளரும் செல்வன், வளர்கின்ற செல்வன்) என்ற சொல் வினைத்தொகையினை குறிக்கிறது.
- வினைத்தொகைச் சொல்லுக்கு இடையில் வல்லினம் மிகக் கூடாது என்ற விதியின் அடிப்படையில் உள்ள திருவளர்செல்வன் என்ற சொல்லே சரியானது ஆகும்.
Similar questions
Math,
4 months ago
Social Sciences,
4 months ago
Computer Science,
4 months ago
English,
1 year ago
Science,
1 year ago