கவிதை எழுத அறிய வேண்டுவனவாகச் சுரதா கூறுவனவற்றை விவரிக்க.
Answers
Answered by
13
கவிதை எழுத அறிய வேண்டுவனவாகச் சுரதா கூறுவன
கவிதை எழுதுதல்
- அரிசியினை உலையிலிட்டால் சோறாகிறது.
- அரும்பு இதழ்விரிந்து பூவாகிறது.
- அதுபோலவே வசனமாக பேசும் வார்த்தைகளை எழுத்து, அசை, சீர், தளை, அடி, தொடை முதலியனவற்றினை கற்று, அவை சரியான அமையும் வகையில் கவிதை எழுதினால் கவிதை நன்றாக வரும்.
கவிதை எழுதத் தொடங்குவதற்கு முன்பு அறிய வேண்டியவை
- நன்கு பழுத்த பழமே சாறு தரும்.
- நீர் பாய்ந்த நிலத்தில்தான் உழவு செய்ய இயலும்.
- அதுபோலவே கவிதையினை எழுதத் தொடங்கும் முன்பு எழுத்து, எழுத்து அசையாகும் தன்மை, சீர்களின் அமைப்பு, சீர்களுக்கு இடையே வரும் தளை, வரிகள் முதலியனவற்றினை அறிந்து கொள்ள வேண்டும்.
கவிதை
- தேமாவும் புளிமாவும் சீர்களில் காய்க்கும்.
- ஏமாந்தால் தளை தட்டும்.
- சாமானிய மக்களுக்கும் புரியும் வகையில் கவிதை தமிழில் எளிமையாக படைக்க வேண்டும்.
- நம் முன்னோர்களை பின்பற்றி கற்றால் கவிதையில் அறமும் பொருளும் வெளிப்படும்.
- புகழ் பெறும் அளவிற்கான சிறந்த கவிதைகளை எழுத வேண்டும்.
Similar questions