காப்பியத்தைக் குறிக்கும் பிற பெயர்கள் யாவை?
Answers
Answered by
3
காப்பியத்தைக் குறிக்கும் பிற பெயர்கள்
காப்பியம்
- காப்பியம் என்னும் சொல் ஆனது காப்பு + இயம் எனப் பிரிந்து மரபைக் காப்பது, இயம்புவது, வெளிப்படுத்துவது, மொழியைச் சிதையாமல் காப்பது என்றெல்லாம் பொருள் தருகிறது.
- காப்பியம் என்ற சொல் ஆனது வடமொழியில் காவியம் எனவும், ஆங்கிலத்தில் EPIC எனவும் குறிப்பிடப்படுகிறது.
- தமிழ் விடு தூது என்ற நூலில் பஞ்ச காப்பியம் என்ற சொற்றொடர் இடம்பெற்று உள்ளது.
- காப்பியம் பெருங்காப்பியம், சிறு காப்பியம் என இரு வகைப்படும்.
பிற பெயர்கள்
- பொருட் தொடர்நிலைச் செய்யுள், கதைச் செய்யுள், அகலக்கவி, தொடர்நடைச் செய்யுள், விருத்தச் செய்யுள், உரையிடையிட்ட பாட்டுடைச் செய்யுள், மகா காவியம் முதலியன காப்பியத்தைக் குறிக்கும் பிற பெயர்கள் ஆகும்.
Similar questions