நடுங்கும்படியான துன்பம் இல்லாதவர் அ) வரப்போவதை முன்னரே அறிந்து காத்துக் கொள்ளக் கூடியவர். ஆ) மனத்திட்பம் உடையவர் இ) அரசரைச் சார்ந்து வாழ்கின்றவர் ஈ) சூதாடுமிடத்தில் காலம் கழிப்பவர்
Answers
Answered by
1
வரப்போவதை முன்னரே அறிந்து காத்துக் கொள்ளக் கூடியவர்
திருக்குறள்
- உலக மக்கள் அனைவருக்கும் தேவையான பொதுவான கருத்துக்களை கூறுவதால் உலக பொதுமறை என திருக்குறள் அழைக்கப்படுகிறது.
- இது அறத்துப்பால், பொருட்பால், காமத்துப்பால் என மூன்று பிரிவுகளையும், 133 அதிகாரங்களையும், 1330 குறட்பாக்களையும் கொண்டு உள்ளது.
- முப்பால், பொய்யாமொழி, வாயுறைவாழ்த்து, உத்திரவேதம் என பல சிறப்புப் பெயர்களை கொண்டு உள்ளது.
- திருக்குறளின் சிறப்பினை விளக்க புலவர்களால் பாடப்பட்ட நூல் திருவள்ளுவமாலை ஆகும்.
அறிவு உடைமை
- எதிரதாக் காக்கும் அறிவினார்க்கு இல்லை
- அதிர வருவதோர் நோய்.
விளக்கம்
- பின்பு வரப்போவதை முன்னரே அறிந்து காத்துக் கொள்ளக் கூடிய வல்லமை உடைய அறிவுரையார்க்கு அவர்கள் நடுங்கும் படியான துன்பம் ஒன்றும் இல்லை.
Similar questions