" யானை புக்க புலம்போலத் தானும் உண்ணான் உலகமும் கெடுமே – உவமையையும் பொருளையும் பொருத்தி விளக்குக."
Answers
Answered by
4
யானை புக்க புலம்போலத் தானும் உண்ணான் உலகமும் கெடுமே
உவமை
- ஒன்றை பற்றி விளக்க, தெளிவுபடுத்த, அழகுபடுத்த உதவும் மிகவும் எளிமையான, தொன்மையான கருவியே உவமை ஆகும்.
- சங்க இலக்கியங்களில் பிற அணிகளை ஒப்பிடுகையில் உவமை அணி தான் அதிகமாக இடம்பெற்றுள்ளது.
(எ.கா)
- யானை புக்க புலம்போலத் தானும் உண்ணான் உலகமும் கெடுமே
விளக்கம்
- பாண்டிய மன்னன் அறிவுடை நம்பி மக்களிடம் வற்புறுத்தி வரியினை வசூல் செய்கிறான்.
- இதனால் மக்கள் பெருந்துயரம் அடைகின்றனர்.
- இது யானைக்காக ஒதுக்கப்பட்ட நெற்வயலில் யானையினை மேய விட்டால், அது உண்ணும் நெற்கதிரைவிட அதன் காலில் மிதிப்பட்டு வீணாகும் நெற்கதிர்களே அதிகமாக இருக்கும்.
- இதில் வற்புறுத்தி வரியினை வசூலிக்கும் மன்னனுக்கு யானையும், பெருந்துயர் அடையும் மக்களுக்கு அழியும் நெற்கதிர் மணிகளும் உவமையாக கூறப்பட்டு உள்ளன.
Similar questions