எளிய மக்களின் வலிகளை நாட்டுப்புற இலக்கிய வடிவங்களே முழுமையாகப் பிரதிபலிக்கின்றன – நிறுவுக.
Answers
Answered by
4
Explanation:
நாட்டுப்புற இலக்கியத்தின் வேர்கள் மனித சமுதாயத்தில் மிக ஆழமாகப் பதிந்துள்ளன. நாட்டுப்புற இலக்கியமானது மனித சமுதாயம் எதை அனுபவித்ததோ, எதைக் கற்றதோ அதைக் குவித்து வைத்திருக்கும் சேமிப்பு அறையாகும்" என்கிறார் முனைவர் சு.சக்திவேல் (நாட்டுப்புற இயல் ஆய்வு : பக்கம் : 22). எனவே நாட்டுப்புற இலக்கியம் மண்ணின் மணத்தைப் பரப்பும் சிறப்பினைக் கொண்டது. நாட்டுப்புற இலக்கியம் என்ற வகைமைப்பாட்டிற்குப் பல வகையினைக் காண முடியும். அவை,
1) நாட்டுப்புறப் பாடல்கள்
2) நாட்டுப்புறக் கதைகள்
3) நாட்டுப்புறக் கதைப்பாடல்கள்
4) நாட்டுப்புறப் பழமொழிகள்
5) விடுகதைகள்
6) புராணங்கள்
Answered by
5
நாட்டுப்புற இலக்கியங்கள்
- இலக்கியங்கள் என்பது பொதுவாக அரசன், இறைவன் முதலியனவற்றினை பற்றியதாகவே இருக்கும்.
- நாட்டுப்புற இலக்கியங்கள் மட்டுமே ஏழை எளிய மக்களின் வாழ்க்கையினை பற்றி கூறுகிறது.
- நம் பாடப் பகுதியில் இடம்பெற்றுள்ள தேயிலை தோட்டப்பாட்டு போன்ற நாட்டுப்புற பாடல்களில் தேயிலை தோட்டத்தில் மக்கள் பட்ட கஷ்டங்கள் கூறப்பட்டுள்ளன.
- ஆங்கில ஆட்சியின் கீழ் வந்த இந்தியாவில் ஏழை விவசாயிகள், மக்கள் அடிமைகளாக நடத்தப்பட்டனர்.
- சில ஏமாற்றுக்காரர்களின் பேச்சினை நம்பிய மக்கள் கடல் கடந்து இலங்கை, அந்தமான் தீவுகள் முதலிய இடங்களில் குறைந்த சம்பளத்திற்கு அதிக நேரம் வேலை செய்து உள்ளனர்.
- தேயிலை தோட்டங்களில் மக்கள் கரும்பு சாலையில் பிழியப்படும் கரும்பினை போல தங்கள் உடல்நோக உழைத்தனர்.
- பல்வேறு துன்பங்களை அனுபவித்த மக்கள் தங்களின் பிள்ளைகளாவது நன்றாக படிக்க வேண்டும் என விரும்பினர்.
- இதற்கான வழியும், அவர்களின் வாழ்வில் மீண்டும் மகிழ்ச்சி வர வழியும் கூட கூறப்பட்டுள்ளது.
- எளிய மக்களின் வலிகளை நாட்டுப்புற இலக்கிய வடிவங்களே முழுமையாகப் பிரதிபலிக்கின்றன.
Similar questions