இறைமகனாரின் இன்னலைக் கண்டு மக்கள் எவ்விதம் புலம்பினர்?
Answers
Answered by
5
இறைமகனாரின் இன்னலைக் கண்டு மக்கள் புலம்பிய விதம்
இரட்சணிய யாத்திரிகம்
- ஜான் பன்யன் என்பர் எழுதிய பில்கிரிம்ஸ் புரோகிரஸ் என்ற ஆங்கில நூலினை தழுவி கிறிஸ்துவக் கம்பர் என அழைக்கப்படும் எச்.ஏ. கிருட்டிணனார் அவர்களால் தமிழில் எழுதப்பட்ட நூலே இரட்சணிய யாத்திரிகம் ஆகும்.
- இது ஆதி பருவம், குமார பருவம், நிதான பருவம், ஆரணிய பருவம், இரட்சணிய பருவம் என ஐந்து பருவங்களையும், 3766 பாடல்களையும் கொண்ட நூல் ஆகும்.
மக்களின் புலம்பல்
- இறைமகனாரின் இன்னலைக் கண்ட மக்கள், இத்தனை கொடுமைகள் நடந்த பிறகும் இந்த உலகம் இன்னும் பிளந்து வெடிக்கவில்லையே! இது என்னே!
- வானம் இடிந்து விழவில்லையே! இது என்னே!
- கடல் நீர் வற்றிப் போகவில்லையே! இது என்னே!.
- இந்த உலகம் இன்னும் அழியாமல் தாமதிப்பதும் ஏனோ? என புலம்பினர்.
Similar questions