ரைசோபஸின் பாலினப் பெருக்கத்தில் உள்ள படிநிலைகளைக் குறிப்பிடுக.
Answers
Answered by
1
Answer:
பால், பாலினம் என்னும் இரு சொற்கள் ... இருபாலாருக்கும் இடையில் உள்ள ...
Answered by
0
ரைசோபஸின் பாலினப் பெருக்கத்தில் உள்ள படிநிலைகள்
- பாலினப் பெருக்கம் கேமீட்டகங்களின் இணைவு மூலம் நடைபெறுகிறது.
- பாலினப்பெருக்கத்தில் பங்கேற்கும் ஹைஃபாக்கள் புறத்தோற்றத்தில் வேறுபட்டு இருப்பதில்லை.
- ஆனால் செயலில் வேறுபட்டு இருக்கும்.
- இவ்வாறு செயலில் வேறுபட்ட இரு உடலங்கள் பாலினப்பெருக்கத்தில் ஈடுபடுவது மாற்று உடலத்தன்மை எனப்படும்.
- மைசீலியங்கள் இரு எதிரெதிரான கேமீட்டகங்களை தோற்றுவிக்கின்றன.
- மைசீலியங்கள் கருமுட்டைத்தாங்கி எனப்படும் ஹைஃபாக்களை தோற்றுவிக்கின்றன.
- இரு கருமுட்டைத்தாங்கியின் நுனிகளும் பருத்துக் கேமீட்டக முன்னோடிகளை தோற்றுவிக்கின்றன.
- கேமீட்டக முன்னோடிகளின் நுனியின் அருகே தடுப்புச்சுவர் தோன்றி, கேமீட்டகம் மற்றும் சஸ்பென்சார் செல் உருவாகிறது.
- பிறகு சைட்டோபிளாச இணைவு, உட்கரு இணைவு ஏற்படுகிறது.
- உட்கரு இணைவால் இரட்டைமய உறக்க கருமுட்டை உருவாகிறது.
- இரட்டைமய உறக்க கருமுட்டை ஓய்வு காலத்திற்கு பிறகு உட்கருக்கள் குன்றல் செல் பகுப்பு அடைகின்றன.
- கருமுட்டை முளைத்து வித்தகத்தாங்கிகள், உறக்கக் கருமுட்டை வித்தகம் உருவாகின்றன. உறக்கக் கருமுட்டை வித்தகம் +, - என இருவகை வித்துக்களை பெற்றுள்ளது.
- தகுந்த வளர் தளத்தில் வித்துகள் விழுந்து அவை முளைத்துப் புதிய மைசீலியத்தினை உருவாக்குகின்றன.
Similar questions