கீழ்கண்டவற்றில் பல்காய்ப்புத் தாவரம் எது? அ) மாஞ்சிஃபெரா ஆ) பாம்புசா இ) மியூசா ஈ) அகேவ்
Answers
Answered by
3
மாஞ்சிஃபெரா
பல் பருவத் தாவரங்கள்
- பல வருடங்கள் வளரக்கூடியவையாக பல் பருவத் தாவரங்கள் உள்ளன.
- பல் பருவத் தாவரங்கள் தன் வாழ் நாளில் பலமுறை பூத்துக் காய்க்கும் தன்மையினை உடையது ஆகும்.
பல் காய்ப்புத் தாவரம்
- ஒவ்வொரு வருடமும் பூத்துக் காய்க்கும் தாவரங்களுக்கு பல் காய்ப்புத் தாவரம் என்று பெயர்.
- பல் காய்ப்புத் தாவரத்திற்கு உதாரணமாக மாமரம் (மாஞ்சிஃபெரா இண்டிகா), சப்போட்டா போன்ற மரங்களை கூறலாம்.
ஒரு காய்ப்புத் தாவரம்
- ஒரு சில தாவரங்கள் பல வருடங்கள் உடல் வளர்ச்சியினை அடைந்து, தன் வாழ் நாளில் ஒரே ஒரு முறை மட்டுமே பூத்து, காய்த்து பின் இறக்கின்றன.
- இந்த வகை தாவரங்களுக்கு ஒரு காய்ப்புத் தாவரம் என்று பெயர்.
- ஒரு காய்ப்புத் தாவரத்திற்கு உதாரணமாக மூங்கில், தாழிப்பனை, கற்றாழை (அகேவ்), வாழை (மியூசா) போன்ற தாவரங்களை கூறலாம்.
Similar questions