தவறான இணையைத் தேர்ந்தெடு அ) சாஜிட்டேரியா - ஹெட்டிரோஃபில்லி ஆ) லாப்லாப் - முச்சிற்றிலை அங்கைக் கூட்டிலை இ) பெகோனியா - இலை மொசைக் ஈ) அலமாண்டா - மூவிலை அமைவு
Answers
Answered by
0
அலமாண்டா - மூவிலை அமைவு
சாஜிட்டேரியா - ஹெட்டிரோஃபில்லி (இரு வடிவ இலை அமைவு)
- ஒரே தாவரத்தில் இரு வகையான இலைகள் காணப்பட்டால் அதற்கு இரு வடிவ இலை அமைவு என்று பெயர்.
- பெரும்பாலான நீர்வாழ்த் தாவரங்களில் இரு வடிவ இலை அமைவு காணப்படுகிறது.
- (எ.கா) ரனன்குலஸ் அக்குவாடிலிஸ், அலிஸ்மா பிளான்டகோ (நீர் வாழை), சாஜிட்டேரியா (அம்புத்தலை) மற்றும் லிம்னோஃபிலா ஹெட்டிரோஃபில்லா ஆகும்.
லாப்லாப் - முச்சிற்றிலை அங்கைக் கூட்டிலை
- இலைக் காம்பில் மூன்று சிற்றிலைகள் அமைந்திருந்தால் அதற்கு முச்சிற்றிலை அங்கைக் கூட்டிலை என்று பெயர்.
- (எ.கா) லாப்லாப்.
பெகோனியா - இலை மொசைக்
- ஒளிசார் பரவிலை அமைவிற்கு (Leaf mosaic) உதாரணமாக பெகோனியா தாவரத்தினை கூறலாம்.
அலமாண்டா - மூவிலை அமைவு
- நீரியம் என்ற தாவரம் ஆனது மூவிலை அடுக்கமைவிற்கும், அலமாண்டா தாவரம் ஆனது வட்ட இலை அடுக்கமைவிற்கும் உதாரணம் ஆகும்.
Similar questions