கீழ்கண்டவற்றின் ஒற்றுமை, வேற்றுமைகளை எழுதுக. அ) அவிசென்னியா, ட்ராபா ஆ) வேர் மொட்டுக்கள், இலை மொட்டுக்கள் இ) இலைத்தொழில் தண்டு, குறு இலைத்தொழில் தண்டு
Answers
Answered by
0
Please tell in English
Answered by
1
ஒற்றுமை மற்றும் வேற்றுமை
அவிசென்னியா, ட்ராபா
ஒற்றுமை
- அவிசென்னியா மற்றும் ட்ராபா ஆகிய இரு தாவரங்களின் வேர்களும் புவிக்கு மேலே உள்ளன.
வேற்றுமை
- அவிசென்னியா தாவரத்தில் சுவாச வேர்களும், ட்ராபா தாவரத்தில் ஒளிச்சேர்க்கை வேர்களும் உள்ளன.
வேர் மொட்டுக்கள், இலை மொட்டுக்கள்
ஒற்றுமை
- வேர் மொட்டுக்கள் மற்றும் இலை மொட்டுக்கள் ஆகிய இரண்டும் வேற்றிட மொட்டுகள் ஆகும்.
வேற்றுமை
- பக்க வேர்களில் இருந்து தோன்றி சிறு தனிச் செடிகளாக வளர்பவை வேர் மொட்டுகள் ஆகும்.
- இலைகளின் நரம்புகள் அல்லது விளம்பில் இருந்து தோன்றும் மொட்டுகளுக்கு இலை மொட்டுகள் என்று பெயர்.
இலைத்தொழில் தண்டு, குறு இலைத்தொழில் தண்டு
ஒற்றுமை
- இலைத்தொழில் தண்டு மற்றும் குறு இலைத்தொழில் தண்டு ஆகிய இரண்டும் தட்டையான அல்லது உருண்ட தண்டாகும்.
வேற்றுமை
- இலைத்தொழில் தண்டு ஆனது பல கணுவிடைப் பகுதிகளையும், குறு இலைத்தொழில் தண்டு ஆனது ஒன்று அல்லது இரண்டு கணுவிடைப் பகுதிகளையும் கொண்டுள்ளன.
Similar questions