History, asked by yaswanth2531, 10 months ago

நீலகேசி_____பாடல்களைக் கொண்டது​

Answers

Answered by PranavMNSSVM
4

Answer:

sorry Anna theiralla. .............?...,

Answered by harshnihaal
3

நீலகேசி என்பது ஐஞ்சிறு காப்பியங்கள் எனப்படும் ஐந்து தமிழ் இலக்கிய நூல்களுள் ஒன்றாகும். சமண சமய நூலான நீலகேசி ஒரு கதைப் பின்னணியில் சமணக் கொள்கைகளை விளக்குகின்றது. தமிழில் எழுதப்பட்ட முதலாவது தருக்க நூல் இதுவெனக் கூறப்படுகின்றது. பௌத்த சமயத்தின் பெருமை கூற எழுந்த காப்பியமான குண்டலகேசி எனும் நூலுக்கு மறுப்பாகவே நீலகேசி எழுதப்பட்டுள்ளது. எனினும் இதனை எழுதியவர் யார் எனத் தெரியவில்லை. இந்நூலுக்கு நீலகேசி திரட்டு என்ற பெயரும் காணப்படுகிறது.[1]

இந்நூல் கடவுள் வாழ்த்து தவிரப் 10 பகுதிகளாக வகுக்கப்பட்டுள்ளது. இப்பதினொரு பகுதிகளிலும் மொத்தமாக 894 பாடல்கள் உள்ளன. இவையனைத்தும் விருத்தப்பாவினால் ஆனது. இப்பகுதிகளின் பெயர்களையும், அவற்றில் உள்ள பாடல்களின் எண்ணிக்கைகளையும் கீழுள்ள பட்டியலில் காணலாம்.

1 கடவுள் வாழ்த்தும் பதிகமும் - 9 பாடல்கள்

2 தரும உரை - 140 பாடல்கள்

3 குண்டலகேசி வாதம் - 82 பாடல்கள்

4 அர்க்க சந்திர வாதம் - 35 பாடல்கள்

5 மொக்கல வாதம் - 193 பாடல்கள்

6 புத்த வாதம் - 192 பாடல்கள்

7 ஆசீவக வாதம் - 71 பாடல்கள்

8 சாங்கிய வாதம் - 53 பாடல்கள்

9 வைசேடிக வாதம் - 41 பாடல்கள்

10 வேத வாதம் - 30 பாடல்கள்

11 பூத வாதம் - 41 பாடல்கள்

Similar questions