கிளைட்டோரியா டெர்னேஷியாவின் மலர் பண்புகளை விளக்குக.
Answers
Answered by
0
Answer:
I don't know this languages ....sorry...
Answered by
0
கிளைட்டோரியா டெர்னேஷியாவின் மலர் பண்புகள்
மலர்
- கிளைட்டோரியா டெர்னேஷியாவின் மலர் ஆனது பூவடிச் செதில் உடையது, பூக்காம்பு செதில் உடையது ஆகும்.
- இவற்றின் பூக்காம்புச் செதில்கள் அளவில் பெரியவை ஆகும்.
- மலரில் காம்பு காணப்படுகிறது.
- இவை இரு பூவிதழ் அடுக்கினை உடையவை ஆகும்.
- மலர் ஆனது முழுமையானது, இரு பால் மலர் மற்றும் ஐந்தங்க மலர் ஆகும்.
- இரு பக்கச்சீரினை உடைய மற்றும் மேல்மட்டச் சூலகப்பையினை உடைய மலர்கள் ஆகும்.
புல்லிவட்டம்
- 5 இணைந்த பசுமையான புல்லிகள் தொடு இதழமைவில் அமைந்துள்ளது.
அல்லி வட்டம்
- வெண்மை அல்லது நீல நிற அல்லிகள் தனித்தவை, ஒழுங்கற்றவை, வண்ணத்துப் பூச்சி வடிவில் அமைந்தவை ஆகும்.
- இந்த அல்லிகள் இறங்குதழுவு இதழமைவில் உள்ளன.
மகரந்தத்தாள் வட்டம்
- மகரந்ததாள்கள் 10, மகரந்தப்பை ஈரறையுடையது.
சூலக வட்டம்
- பல விளிம்பு சூல் ஒட்டு முறையில் சூல்கள் அமைந்து உள்ளன.
- சூலக முடி தூவிகளுடையது.
Similar questions
Social Sciences,
5 months ago
Math,
5 months ago
Hindi,
5 months ago
Physics,
10 months ago
Science,
1 year ago