புரோட்டோபிளாச கோட்பாட்டைக் கூறுக.
Answers
Answered by
0
புரோட்டோபிளாச கோட்பாடு
- கார்டி என்பவர் முதன்முதலாக புரோட்டோபிளாசத்தினை கண்டு பிடித்தார்.
- 1835 ஆம் ஆண்டு விலங்கு செல்களில் உள்ள ஒரு உயிருள்ள சாற்றினைக் கண்டறிந்த பெலிக்ஸ் டுஜார்டின் அதற்கு சார்கோடு என பெயரிட்டார்.
- 1839ல் தாவரச் செல்களுக்கு உள்ளே உள்ள சாற்றினை பர்கின்ஜி என்பவர் புரோட்டோபிளாசம் என அழைத்தார்.
- 1846ல் புரோட்டோபிளாசத்தின் முக்கியத்துவத்தினை ஹூகோ வான் மோல் என்பவர் கூறினார்.
- 1861ல் மாக்ஸ் ஸ்கல்ஸ் என்பவர் புரோட்டோபிளாசத்திற்கும் சார்கோடுக்கும் இடையே உள்ள ஒற்றுமையினை கூறினார்.
- இதனை 1892ல் ஓ.ஹெர்ட்விக் என்பவர் புரோட்டோபிளாச கோட்பாடு என அழைத்தார்.
- 1868ல் ஹக்ஸ்லி என்பவர் உயிரியின் இயற்பியல் அடிப்படை என புரோட்டோபிளாசத்தினை கூறினார்.
Similar questions