இருவிதையிலைத் தாவரங்களில் ஒட்டுப்போடுதல் வெற்றிகரமாக உள்ளது. ஆனால், ஒருவிதையிலைத் தாவரங்களில் அவ்வாறு இல்லை. ஏனென்றால், இரு விதையிலை தாவரங்களில் அ) வளையமாக வாஸ்குலக் கற்றைகள் அமைந்திருப்பது ஆ) இரண்டாம் நிலை வளர்ச்சிக்கான கேம்பியம் அமைந்துள்ளது. இ) சைலக்குழாய் கூறுகள் ஒரு முனையில் இருந்து அடுத்த முனை வரை இணைந்து அமைந்திருப்பது. ஈ) கார்க் கேம்பியம் அமைந்திருப்பது.
Answers
Answered by
1
இரண்டாம் நிலை வளர்ச்சிக்கான கேம்பியம் அமைந்துள்ளது
கேம்பியம்
- கேம்பியம் என்பது செவ்வக வடிவம் உடைய, மெல்லிய செல் சுவரினை கொண்ட ஆக்குத் திசு செல்களால் ஆனது ஆகும்.
- ஒன்றிலிருந்து நான்கு அடுக்கு செல்களாக கேம்பியம் ஆனது உள்ளது.
- இந்த கேம்பியம் ஆனது இரண்டாம் நிலை வளர்ச்சியின் போது புதிய செல்களைத் தோற்றுவிக்கும் திறனை உடையது.
- இரு விதையிலை தாவரங்களில் கேம்பியம் ஆனது இரண்டாம் நிலை வளர்ச்சியின் போது இரண்டாம் நிலை ஆக்குத்திசுவாக தோன்றுகிறது.
- இதனால் இரு விதையிலைத் தாவரங்களில் ஒட்டுப்போடுதல் வெற்றிகரமாக உள்ளது.
- ஒரு விதையிலை தாவரங்களில் கேம்பியம் காணப்படுவது கிடையாது.
- இதனால் ஒரு விதையிலைத் தாவரங்களில் ஒட்டுப்போடுதல் வெற்றிகரமாக நடைபெறுவதில்லை.
Similar questions