கூற்று - கட்டைத் தன்மையுடைய தண்டுகளில் ஆண்டுக்காண்டு வைரக்கட்டையின் அளவு அதிகரிக்கிறது. காரணம் - கேம்பிய வளையத்தின் செயல்பாடு தடையில்லாமல் தொடர்கிறது. அ) கூற்று, காரணம் இரண்டும் சரி. மேலும் காரணம் கூற்றுக்குச் சரியான விளக்கம் ஆகும். ஆ) கூற்று, காரணம் இரண்டும் சரி. ஆனால் காரணம் கூற்றுக்குச் சரியான விளக்கமல்ல. இ) கூற்று சரி, ஆனால் காரணம் தவறு. ஈ) கூற்று, காரணம் இரண்டும் தவறு.
Answers
Answered by
0
கூற்று மற்றும் காரணம்
- கூற்று, காரணம் இரண்டும் சரி.
- மேலும் காரணம் கூற்றுக்குச் சரியான விளக்கம் ஆகும்.
விளக்கம்
வைரக் கட்டை
- இரண்டாம் நிலை சைலம் உடைய கட்டை ஆனது சாற்றுக் கட்டை, வைரக் கட்டை என இரு வகைப்படும்.
- கட்டையின் அடர் நிறமான மையப் பகுதி ஆனது வைரக் கட்டை அல்லது டியூரமென் என அழைக்கப்படுகிறது.
- வைரக் கட்டையில் உள்ள சைலக் குழாய் டைலோஸ்களால் அடைக்கப்படுவதால் நீர் வைரக் கட்டையின் வழியே கடத்தப்படுவது தடுக்கப்படுகிறது.
- வைரக் கட்டை ஆனது டைலோஸ்கள் மற்றும் அதன் உட்பொருட்களால் வண்ணமுடையதாக, இறந்ததாக மற்றும் கடினமான பகுதியாக மாறுகிறது.
- கேம்பிய வளையத்தின் செயல்பாடு தடையில்லாமல் தொடர்கிறது.
- இதன் காரணமாக கட்டைத் தன்மையுடைய தண்டுகளில் ஆண்டுக்காண்டு வைரக் கட்டையின் அளவு அதிகரிக்கிறது.
Similar questions