Biology, asked by anjalin, 10 months ago

தாவர வள‌ர்‌ச்‌சி ஹா‌ர்மோ‌ன்க‌ளி‌ன் ப‌ண்புகளை கூறுக

Answers

Answered by Anonymous
0

HI HERE IS MY ANSWER

தாவர வளரூக்கி (Plant hormone), அல்லது தாவர வளர்ச்சி நெறிப்படுத்தி அல்லது தாவர ஹார்மோன் எனப்படுவன தாவரங்களின் வளர்ச்சியை நெறிப்படுத்தும், வேதிப்பொருட்களால் ஆன ஒருவகை இயக்குநீர் ஆகும். இவை தாவரங்களின் குறிப்பிட்ட பகுதிகளில் உருவாக்கப்படும் மூலக்கூறுகளாகவும், மிகக் குறைந்த அளவிலேயே காணப்படுவனவாகவும் உள்ளன. வளரூக்கிகள் இலக்குக் கலங்களிலும் (cell), பிற இடங்களிலும் செயல்முறைகளில் மாற்றத்தை உருவாக்குகின்றன. விலங்குகளில் இருப்பதுபோல் வளரூக்கிகளைச் சுரக்கும் சுரப்பிகள் தாவரங்களில் இருப்பதில்லை. தாவர வளரூக்கிகள், தாவர வளர்ச்சியை நெறிப்படுத்துகின்றன. விதை வளர்ச்சி, பூக்கும் காலம், பூக்களின் பால் (ஆணா, பெண்ணா) என்பவற்றையும் தீர்மானிக்கின்றன. அவை இழையங்களில் எவை மேல்நோக்கியும், எவை கீழ் நோக்கியும் வளரவேண்டும் என்பதையும் தீர்மானிக்கின்றன. இலைகளின் உருவாக்கம், தண்டு வளர்ச்சி, பழம் பழுத்தல், தாவரத்தின் வாழ்வுக்காலம் அதன் இறப்பு என்பவற்றையும் தாவர வளரூக்கிகள் கட்டுப்படுத்துகின்றன. எனவே தாவர வளர்ச்சிக்கு வளரூக்கிகள் இன்றியமையாதன ஆகும்.

PLS MARK ME AS BRAINLIEST

#தமிழ்

#ladybug

Answered by steffiaspinno
0

தாவர வள‌ர்‌ச்‌சி ஹா‌ர்மோ‌ன்க‌ளி‌ன் ப‌ண்புக‌ள்

  • பொதுவாக தாவர வள‌ர்‌ச்‌சி ஹா‌ர்மோ‌ன்க‌ள் வே‌ர்க‌ள், த‌ண்டுக‌ள் ம‌ற்று‌ம் இலைக‌ளி‌ல் உ‌ற்ப‌த்‌தி செ‌ய்ய‌ப்படு‌கி‌ன்றன.
  • தாவர வள‌ர்‌ச்‌சி ஹா‌ர்மோ‌ன்க‌ள் ஆனது தாவர‌‌த்‌தி‌ன் ஒரு பகு‌தி‌யி‌ல் இரு‌ந்து ம‌ற்றொரு பகு‌தி‌க்கு கட‌த்து‌த் ‌திசு‌க்க‌ள் மூலமாக கட‌த்த‌ப்படு‌‌கி‌‌ன்றது.
  • மிக‌க் குறை‌ந்த அள‌வி‌ல் தேவை‌ப்படுபவையாகவே தாவர வள‌ர்‌ச்‌சி ஹா‌ர்மோ‌ன்க‌ள் உ‌ள்ளன.
  • அனை‌த்து தாவர வள‌ர்‌ச்‌சி ஹா‌ர்மோ‌ன்க‌ளு‌ம் க‌ரிம‌ச் சே‌ர்ம‌ங்க‌ள் ஆகு‌ம்.
  • தாவர வள‌ர்‌ச்‌சி ஹா‌ர்மோ‌ன்க‌ளி‌ன் உ‌ற்ப‌த்‌தி‌க்கு‌ச் ‌சிற‌ப்பு வா‌ய்‌ந்த செ‌ல்களோ அ‌ல்லது உறு‌ப்புகளோ ‌கிடையாது.
  • தாவர வள‌ர்‌ச்‌சி ஹா‌ர்மோ‌ன்க‌ள் ஆனது தாவர வள‌ர்‌ச்‌சி‌யினை‌த் தூ‌ண்டுத‌ல், தாவர வள‌ர்‌ச்‌சி‌யினை‌த் தடை செ‌ய்த‌ல், வள‌ர்‌ச்‌சி உருமா‌ற்ற‌ம் முத‌லியனவ‌ற்‌றி‌ல் மு‌க்‌கிய ப‌ங்கு வ‌கி‌க்‌‌கிறது.  
Similar questions