India Languages, asked by durairajr1908, 8 months ago

பிள்ளைத்தமிழ் இலக்கியத்தின் முன்னோடி யார்? ​

Answers

Answered by Anonymous
0

Answer:

ക്ഷമിക്കണം എനിക്ക് മനസ്സിലാകുന്നില്ല

Explanation:

നിങ്ങൾ പറയുക ചോദ്യം ഇംഗ്ലീഷിൽ

Answered by ravilaccs
0

Answer:

பெரியாழ்வார் பாடிய பிள்ளைத்தமிழ், பிள்ளைத்தமிழ் நூல்களுக்கு முன்னோடி. குலோத்துங்கசோழன் பிள்ளைத்தமிழ் தமிழில் தோன்றிய முதலாவது பிள்ளைத்தமிழ்.

Explanation:

  • புலவர்கள் தம் அன்புக்குரிய ஒருவரைக் குழந்தையாக வைத்துப் பாடிமகிழ்ந்தார்கள். இதுவே பிள்ளைத்தமிழ் ஆயிற்று.
  • பெரியாழ்வார் பாடிய பிள்ளைத்தமிழ் பிள்ளைத்தமிழ் நூல்களுக்கு முன்னோடி.
  • பிள்ளைத்தமிழ் எனும் பெயரில் நமக்குக் கிடைக்கும் முதல் நூல் குலோத்துங்கன் பிள்ளைத்தமிழ்.
  • இது ஒட்டக்கூத்தரால் இயற்றப்பட்டது. கி.பி. 12-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது. இந்நூல் இரண்டாம் குலோத்துங்கச் சோழனைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்டது.
  • பிள்ளைத்தமிழ் பற்றிய இலக்கணக் குறிப்பை முதலில் வழங்கும் நூல் தொல்காப்பியமே ஆகும்.
  • பிள்ளைத்தமிழ் இலக்கியங்களில் பத்துப் பருவங்களையும் பாடும்போது பாடல்களின் எண்ணிக்கை ஒற்றைப்படையில் இருக்க வேண்டும் எனவும், இரட்டிதுப் பாடினால் ஓசை நீண்டு பாட வேண்டும் என்பது வரையறை ஆகும். ஆனாலும் இவ்வரையறை மீறி பத்துப் பருவத்திற்கான பாடல் எண்ணிக்கைக் குறைத்தும் கூட்டியும் பாடியுள்ள நிலை அறியப்படுகிறது.
  • சிவந்தெழுந்த பல்லவன் பிள்ளைத்தமிழ் - ஒவ்வொரு பருவத்திலும் 7 பாடல்கள்
  • கலைசை செங்கழுநீர் விநாயகர் பிள்ளைத்தமிழ்- ஒவ்வொரு பருவத்திலும் 5 பாடல்கள்
  • பழனிப் பிள்ளைத்தமிழ்- - ஒவ்வொரு பருவத்திலும் 3 பாடல்கள்
  • திருஞான சம்பந்தர் பிள்ளைத்தமிழ்- ஒவ்வொரு பருவத்திலும் 1 பாடல்கள்
  • திருநாவுக்கரசர் பிள்ளைத்தமிழ்- ஒவ்வொரு பருவத்திலும் 1 பாடல்கள
  • ஆண்டாள் பிள்ளைத்தமிழ்- ஒவ்வொரு பருவத்திலும் மாறுபட்ட எண்ணிக்கையுள்ள பாடல்கள்.
  • இலங்கையில் கதிர்காமத் தலத்திலுள்ள முருகன் மேல் இயற்றப்பட்ட கதிர்காமப் பிள்ளைத்தமிழ் என்ற நூல் உண்டு. அதனை இயற்றியவர் இருபதாம் நூற்றாண்டைச் சேர்ந்த சிவங். கருணாலய பாண்டியன் என்னும் புலவர். அவரது பிள்ளைத்தமிழ் நூலில் செந்தமிழ்க் காப்பு, செங்கீரை, மொழிபயில் பருவம், உண வூட்டல், தாலாட்டல், சப்பாணிகொட்டல், முத்தம் தருதல், வருகை, நிலாவழைத்தல், சிறுபறைமுழக்கல், சிற்றில் சிதைத்தல், சிறுதேர் உருட்டல், பூணணிதல், உடைவாள் செறித்தல் என 14 பருவங்கள் காணப்படுகின்றன. மேலும் காப்புப் பருவத்தில் 4 பாக்களும், பிற எல்லாப் பருவங்களிலும் மும்மூன்று பாக்களும் ஆக மொத்தம் 43 பாக்கள் உள்ளன.
  • பெரியாழ்வார் பாடிய பிள்ளைத்தமிழ், பிள்ளைத்தமிழ் நூல்களுக்கு முன்னோடி. குலோத்துங்கசோழன் பிள்ளைத்தமிழ் தமிழில் தோன்றிய முதலாவது பிள்ளைத்தமிழ்.
  • பொதுவாக பிள்ளைத்தமிழ் நூல்கள் ஆண்பால் பிள்ளைதமிழ், பெண்பால்பிள்ளைத்தமிழ் என இருவகையிலேயே அடங்கும். ஆயினும் பிள்ளைத்தமிழ் நூல்களின் வளர்ச்சியைக் கணக்கிட உதவும் வகையில் இவை மேலும்
  • இறைவன் பற்றிய பிள்ளைத்தமிழ் இலக்கியங்கள்
  • இறைவி பற்றிய பிள்ளைத்தமிழ் இலக்கியங்கள்
  • கவிஞர் அல்லது சான்றோர் பற்றிய பிள்ளைத்தமிழ் இலக்கியங்கள்
  • அரசன் பற்றிய பிள்ளைத்தமிழ் இலக்கியங்கள்
  • மக்கள் தலைவர் பற்றிய பிள்ளைத்தமிழ் இலக்கியங்கள்

Reference Link

  • https://brainly.in/question/16078689
Similar questions