கீழ்க்கண்ட எத்தொகுதியில் முதிர் உயிர்கள் ஆர சமச்சீரமைப்பையும், லார்வாக்கள் இருபக்க சமச்சீரமைப்பையும் கொண்டுள்ளன? அ) மெல்லுடலிகள் ஆ) முட்தோலிகள் இ) கணுக்காலிகள் ஈ) வளைதசைப் புழுக்கள்
Answers
Answered by
0
Explanation:
I think it's answer maybe option d)
Answered by
0
முட்தோலிகள்
- அனைத்து முட்தோலிகளும் கடல் வாழ் உயிரினங்கள் ஆகும்.
- முட்தோலிகளின் முதிர் உயிர்கள் ஆர சமச்சீர் அமைப்பையும், லார்வாக்கள் இருபக்க சமச்சீர் அமைப்பையும் கொண்டு உள்ளன.
- இவை நடு அடுக்கில் இருந்து தோன்றிய கால்சியத்தினால் ஆன முட்களுடன் கூடிய அகச்சட்டகத்தினை பெற்று உள்ளதால் முட்தோலிகள் என அழைக்கப்படுகின்றன.
- முட்தோலிகள் தொகுதியின் முக்கிய பண்பு குழல் கால்கள் அல்லது போடியா என்ற கால்களுடன் கூடிய நீர்க்குழல் மண்டலம் அல்லது ஆம்புலேக்ரல் மண்டலம் ஆகும்.
- இவை வயிற்றுப் புறத்தில் வாய்ப் பகுதி மற்றும் முதுகுப் புறத்தில் மலத்துளை ஆகியவற்றினை உடைய முழுமையான செரிமான மண்டலத்தினை பெற்று உள்ளன.
- (எ.கா) நட்சத்திர மீன், கடல் குப்பி, கடல் அல்லி மற்றும் உடையும் நட்சத்திரம் முதலியன ஆகும்.
Similar questions