தலை நாணிகள் பற்றி குறிப்பு வரைக
Answers
________________________________
நீராதாரம் தான் பெரும்பான்மையான மீன் இனங்களின் வாழிடங்களாகும். இவை பெரும்பாலான நீர்வாழ் பகுதிகளை ஆக்கிரமித்துள்ளன. சில மீன்கள் ஆழம் குறைவான சிறு குட்டைகளிலும், சில மீன்கள் ஆழ் கடல்களில், ஒளி புகா பேராழத்திலும் வாழ்கின்றன. உயரமான மலை நீரோடைகள் (எ.கா., கேர், கட்ஜன்) இருந்து தாழ்ந்த, ஆழ்ந்த கடல்களின் ஆழத்திலும் (எ.கா., கல்பர்ஸ் (குள்ள மீனினம், தூண்டி மீன்), என கிட்டத்தட்ட அனைத்து நீர் சூழல்களிலும் அவை காணப்படுகின்றன. சுமார் 33,100 மீன் சிற்றினங்கள், மற்ற எந்த ஒரு முதுகெலும்பிகளிலும் இல்லாத அளவிற்கு உயிரினப்பல்வகைமையைக் கொண்டுள்ளன.
உலகப்பொருளாதாரத்தில், மனிதர்களுக்கு உணவுப்பொருளாக மீன்வளம் ஒரு முக்கியப் பங்கு வகிக்கிறது. பெரும்பாலான உலக நாடுகளின் வணிக, வாழ்வாதாரம் மீன்பிடித்தல் ஆகும். மேலும் உணவுக்காகவும், அழகுக்காகவும் மீன் வளர்த்தல் ஒரு மாபெரும் துறையாக உருவெடுத்துள்ளது. மீன்கள், மீன் பிடிப்பவர்களால் வளர்க்கப்படும் செல்லப்பிராணிகளாகவும், பொதுமக்கள் கண்டுகளிக்கும் மீன்காட்சியங்களில் அழகுக்காகவும் வளர்க்கப்படுகின்றன.
பல்வேறு பண்பாடுகளில் மீனானது புனித தெய்வமாக, பண்பாட்டுச் சின்னமாக, சமய அடையாளங்களாகவும் திகழ்கிறது. பல்வேறு காலகட்டங்களில் கதை, இலக்கியம், காவியம், வானுடவியல், வரலாறு, போன்றவற்றில் முக்கியப் பாத்திரமாகவும் திகழ்ந்துள்ளது.
________________________________
தலை நாணிகள் (செஃபலோகார்டேட்டா)
- தலை நாணிகள் என்ற துணைத் தொகுதிகளில் உள்ள உயிரிகள் பெரும்பாலும் ஆழம் குறைந்த கடல் நீரில் வாழும் வளை வாழ் உயிரிகள் ஆகும்.
- இவை மீன்களைப் போல் சிறிய உடல் அமைப்பைப் பெற்ற உடற்குழி உடைய விலங்குகள் ஆகும்.
- முதுகு நாண், முதுகுபுற குழல்வடிவ நரம்பு வடம் மற்றும் தொண்டை செவுள் பிளவுகள் போன்ற முதுகுநாணிகளின் முக்கிய பண்புகளை தலை நாணிகள் வாழ்நாள் முழுவதும் பெற்று உள்ளன.
- தலை நாணிகள் இதயமற்ற, மூடிய இரத்த ஓட்ட மண்டலத்தினை பெற்று உள்ளன.
- இவற்றில் புரோட்டோநெஃப்ரீடியா மூலம் கழிவு நீக்கம் நடைபெறுகிறது.
- (எ.கா) பிராங்கியோஸ்டோமா (ஆம்பியாக்சஸ் அல்லது லான்சியோலெட்) ஆகும்.