தவளையின் செரிமான மண்டலத்தைப் படம் வரைந்து பாகங்களைக் குறிக்கவும்.
Answers
Answered by
0
☆•°•FOLLOW ME•°•☆
Attachments:
Answered by
0
தவளையின் செரிமான மண்டலம்
- தவளையின் உணவுப்பாதை ஆனது வாய், வாய்க்குழி, தொண்டை, உணவுக்குழல், இரைப்பை, முன் மற்றும் பின் சிறுகுடல், மலக்குடல், பொதுக்கழிவுத்துளை ஆகியவற்றினை கொண்டு உள்ளது.
- வாய்க்குழியின் தரைப்பகுதியில் தசையாலான ஒட்டும் தன்மையினை உடைய நாக்கு உள்ளது.
- மேல் தாடையின் உட்பகுதியில் கூர்மையான சிறிய மேல்தாடைப் பற்கள் ஒற்றை வரிமையில் உள்ளன.
- எனினும் கீழ்த்தாடை பற்கள் அற்றது.
- குட்டையான உணவுக்குழல் இரைப்பையில் முடிகிறது.
- இரைப்பைக்கு பிறகு குடல், மலக்குடல் வழியே இறுதியாக பொது கழிவறையில் திறக்கிறது.
- இரைப்பை சுவரில் சுரக்கப்படும் ஹைட்ரோகுளோரிக் அமிலம் மற்றும் இரைப்பை நீரினால் உணவு செரிக்கப்படுகிறது.
- ஒரளவு செரிக்கப்பட்ட இரைப்பைப்பாகு முன்சிறுகுடலுக்கு செல்கிறது.
- கல்லீரலில் சுரக்கப்படும் பித்த நீர் ஆனது கொழுப்பை பால்மமடையச் செய்கிறது.
- கணைய நீர் கார்போஹைட்ரேட், புரதம் மற்றும் கொழுப்பை செரிக்க உதவுகிறது.
- செரித்த உணவினை குடலுறிஞ்சிகள் மற்றும் நுண்குடலுறிஞ்சிகள் உட்கிரகிக்கின்றன.
- செரிக்காத கழிவுகள் பொதுக்கழிவுத்துளை வழியே வெளியேற்றப்படுகிறது.
Attachments:
Similar questions